நீ என்ற நீளம்
நீ என்ற நீளம்
============
மண் தரையில் மீனுடைந்ததுபோல்
நிமிர்ந்து நின்ற
அந்த வழுக்குமர நிழலில்
எத்தனையோமுறை
ஏற முயன்று
பின் தோற்று தோற்று
பற்றிக்கொள்ள ஏதுமில்லாது
வீழ்ந்ததெல்லாம்
அதன் நிழலெல்லைக்குள்தான்,,,,,,,,,,,,,,!!!!
எனை கம்பமாக்கி
கட்டப்பட்ட அக்கனவின் நிழலில்
ஒற்றைக்கு உறங்கானும்
பேடிகொண்டு நெட்டி உணர்கிறது
அவ்விழுந்த உன் நிர்வேதத்தின்
எச்சிலுறைந்த சூட்டுரை,,,,,,,,,,,,,,,,,,,,,,!!!!
ஏதோ ஒன்றோடு புதைந்துவிட்டு
மூக்கிற்கும் கண்களுக்கும்
மேல் தள்ளப்பட்ட
மூக்குக்கண்ணாடியை
எங்கோ மறந்துபோய் தேடுவதைப்போல
கம்பத்தின் காலடிதடவும்
அவ்விரல்களின் துலக்கத்தில்
பலமற்றிருந்தாலும்
எப்படியோ மீண்டுமேறி
உச்சிதொடும்
தன்னம்பிக்கைமட்டும் குறையாமல்,,,,,,,!!!
நீண்டுவளைந்த அரணுக்குள்
விறைப்புடன்
நடப்பட்ட அக்கம்பத்தின்
புறமுதுகுவரை எட்டியிருந்தது
கட்டுமான இணைப்பின்
இடுக்கினூடே
அன்றைய உதயத்தின்
கதிர்க்கோல்கள் நான்கின் கள்ளப்பார்வை,,,,,,,,,,,,,,!!!!
அது மேலேற மேலேற
உனை உடுத்திய நிழல் அவிழும்
அதே சமயம்
உயிரும் விடைப்பெற்றுக்கொண்டே,,,,,,,!!!!
பற்றி சிரமித்து
முடியாது போயிருப்பினும்
ஊர்ந்த கம்பத்தில் வாசத்தையப்பி
ஜெய்த்துவிட்டிருந்தது உன் நிர்வாணம்,,,,,,,,,,,,!!!
கரைப்புரண்டு
கம்பத்தின் கண்கள் பொழிந்த
உவர்ப்பு மழையால்
அழிபடவேயில்லை
பூசப்பட்ட உன்வாசம் மட்டும்,,,,,,,,,,,,!!!
ஆம் முற்றிலுமாக விலக்கப்பட்டிருந்தாய்
அக்கம்பத்தின் அசுரநிழலோ
குறுகி குறுகி
அதன் கால் தொட்டிருந்தது
"நீ என்ற நீளம்" பெருகியபொழுது ,,,,,,,,!!!!
அனுசரன்