தாத்தாவும் நானும்

தாத்தாவும் நானும்

மனித ஆயுள்
காற்று வெளியேறி
சுருங்கிப்போனது.

உத்தரவு கேட்காமல்
உள் நுழையும் காற்று
சொல்லிக்கொள்ளாமல் போவதில்
வியப்பொன்றும் இல்லை

தாத்தாக்கள்
மார்கண்டேயர்களா என்ன?

தாதாக்களால்
தன் மகன்களின் முனேற்றம்
அறியப்படுவதே இல்லை

அவைகள்
முயற்சி மொடுக்களாகவே
இருந்துவிடுகிறது

மனிதனின்
ஒவ்வொரு எதிர்பார்ப்பும்
இரண்டாம் தலைமுறையில்தான்
பூத்து குலுங்குகிறது

அப்பாக்கள் எல்லாம்
தாதாக்களாகும்போதுதான்
வாழ்க்கை புரிதலுருகிறது
பேரன்களுக்குதான்
பேரறிவு கிடைக்கிறது .

தாத்தாவும் பாட்டியும்
கதைப்பவர்கள் இல்லை
அறிவை விதைப்பவர்கள்

தாதாக்களின் வேகத்திற்கு
பேரன்களால் மட்டுமே
நடக்க முடிகிறது

அப்பாக்கள் துறந்த அறிவையும்
அம்மாக்கள் மறந்த அன்பையும்
தாதாவென்று
பாட்டியிடம்தான்
கேட்ட்க வேண்டும்

எல்லா பாட்டிகளும்
ஔவை பாட்டிகளாக வேண்டும்
ஆத்திசூடி சொல்ல-

ராஜ்கவி. சி. அருள் ஜோசப் ராஜ்

எழுதியவர் : ராஜ்கவி. சி. அருள் ஜோசப் ரா (4-Apr-15, 11:42 am)
சேர்த்தது : rajkavi
Tanglish : THATHAVUM naanum
பார்வை : 218

மேலே