பாலை நிலக்கண்கள் - உதயா

வீட்டினை விடுத்து
தெருவிடம் நகர்ந்தப் போது
கத்தி உரையை துறந்து
அநீதி காட்சியாய்
கண்ணில் விழுந்தது

அந்த நெடுஞ்சாலை ஓரத்தில்
நான் நடந்து செல்கையில்
இளவயது வாலிபனின்
பாதி உயிரினை
இரையாக்கி சென்றது
வாகனம் ஒன்று

இழந்த உயிரினை
பெற்றிட எண்ணியே
துடித்தான்
கத்தினான்
அழுதான்
இரையானவன்

திடீரென கூட்டம் கூட்டமாய்
நெருங்கிய மனிதர்கள்
பேயாக மாறினார்கள்
மிச்சமிருந்த உயிரினையும்
இரையாக்கி கொண்டனர்

தனி மனிதனொருவனாய்
கொதித்தெழுந்து
கோபத்தின் உச்சிக்கே சென்று
வார்த்தைகளில் எரிமலையாய்
வெடித்துப் போனேன்

அடே ...ஓநாய் கூட்டங்கலே
உங்கள் மனம் என்ன
இரும்பு சாக்கடையால் ஆனதா ?

உங்கள் கண்கள் என்ன
பாலை நில மணலால்
செதுக்கப்பட்டதா ?

உங்கள் தேகத்தின் உதிரத்தில்
அரலிச் சாரும் கள்ளிப் பாலும்
கலந்துவிட்டதா ?

அங்கு உயிருக்கு துடித்தவன்
உமக்கு உறவில்லை என்பதாலே
உதாசனப்படுத்தி நின்றாயோ ?

விலங்குகளின் உணர்வைக் காட்டிலும்
நெடுந்தூர பாதாளத்தில் உள்ளீரோ ?

அதோ அந்த மூதாட்டிக்கு
சாலைக் கடக்க உதவி செய்யும்
அந்த ஆறுவயது சிறுவனிடம்
சிறுநீரை வாங்கிப் பருகுங்கள்

அப்போதாவது
உங்கள் மனதில்
கருணைக கதவு
திறக்கப் படுகிரதாயென
பார்ப்போம்.........

எழுதியவர் : udayakumar (4-Apr-15, 12:12 pm)
பார்வை : 372

மேலே