கிழிசல்

வாழையிலையைக்
கிழித்து விளையாடிய காற்று.
தென்னை மரத்தில் ஏறியது;
இலை கிழிக்க.
ஏற்கனவே
கீற்றாய் கிழிந்திருந்ததை
காற்று கண்டது
கோபம் கொண்டது
ஒரு குரும்பையை தள்ளி விட்டுப் போனது.

எழுதியவர் : (4-Apr-15, 12:31 pm)
சேர்த்தது : கனவுதாசன்
பார்வை : 60

மேலே