வரலாற்றின் கேள்வி

வெற்றி இப்போது
விலைக்குக் கிடைக்கிறது
விலை கொடுக்க முடியாதவர்கள்
தலை எடுக்க முடியாதா?

கேள்வி கேட்பவர்களைக்
கேலி செய்யலாம்.
தரக்குறைவாகப் பேசி விட்டுத்
தலையும் நிமிரலாம்?

யார்கேட்பது?
மீறிக் கேட்டால்
அடி-உதை.
அடித்த கொள்ளையில்
ஆதரவாய்க் கத்தும்
நாய்களுக்குக் கொஞ்சம்
எச்சில் இலைகள்.

பொறுக்கித் தின்ன
இழிபிறவி மக்கள்
பெருகிவிட்ட பின்
அருகி வருகிறதோ அறம்?

எங்களுக்கான ஆட்சியை
இழிபிறவிகள்
தீர்மானித்து விட்டீர்களே!

கேவலப்பட்டவர்கள்
உங்களை
கேவலப்படுத்திவிட்டார்களே!

என் கேள்விக்கல்ல
வரலாற்றின் கேள்விக்கு
என்ன பதில்
சொல்லப் போகிறீர்கள்?

எழுதியவர் : (4-Apr-15, 12:33 pm)
சேர்த்தது : கனவுதாசன்
Tanglish : varalaatrin kelvi
பார்வை : 83

சிறந்த கவிதைகள்

மேலே