சென்னை தொகுதி-1

சென்னை

மலைநகரம் கொடைக்கானல்
மலர்நகரம் நீலகிரி.
கலைநகரம் மாமதுரை
கவிநகரம் காரைக்குடி
சிலைநகரம் மாமல்லை
செய்நகரம் தஞ்சாவூர்
தலைநகரம் உயர்சென்னை
தமிழ்நாட்டின் கால்பகுதி.

பலர்நகர்ந்து வந்ததனால்
பலகிராமம் இணைந்ததனால்
சிலர்இருந்த ஒருபகுதி
சென்னையிலே ஒருதொகுதி.
புலர்காலை வரும்முன்னே
போவோரும் வருவோரும் ;
கலகலயென வாகனங்கள்
களைப்படையா ஏழ்தினங்கள்.

தகவல் தொழில் நுட்பத்தின்
தலமாக அமைந்ததனால்
மகள்,மகன்கள் பணிபுரிந்து
வருமானம் ஈட்டுவதால்
புகலிடமாய் பெற்றோர்க்கும்
பொருள்தேடும் வாணிபர்க்கும்;
முகம்காட்டும்,பெருங்கூட்டம்
முண்டிவரும் தினங்கூட்டம்

எழுதியவர் : (4-Apr-15, 1:30 pm)
சேர்த்தது : கனவுதாசன்
பார்வை : 42

மேலே