புதுயுக பாரதி - காட்சி 4 குறு நாடகம்

(வேலைத்தளமொன்றில் ஒரு உழைப்பாளி சிந்தும் வியர்வையை அறியாது வேலை செய்யலாம்.ஆனால்
காலிருந்து சிந்தும் உதிரத்தைக்கூட அறியாமல் தொழில் புரிவதை பாரதி காண்கிறார்.)

பாத்திரங்கள்:1.முத்தையா
2.கனகு
3.எஜமான்
4.பாரதி

முத்தையா:என்னப்பா ஓய்வே இல்லாமே வேலை பார்த்துட்டு இருககாய்.

கனகு:என்னத்தே சொல்ல களைப்பை பார்த்தால் வீட்டுலே அடுப்பு எறியுமா?

முத்தையா:அதுவும் சரிதான்.நானும் எண்டே வேலையை பாக்குறன்.

கனகு:அதே சீக்கிரமாய் செய்ங்க.எசமான் கண்டாருண்டா கத்தப் போறாரு....
(இருவரும் அந்தி சாயும் நேரம் வேலை முடித்து நாள் கூலி வாங்க எசமானிடம் செல்கின்றனர்.)

முத்தையா:எஜமான்....எஜமான்.......

எஜமான்:யாருயா?

முத்தையா:நாங்க தான்.

எஜமான்:என்னடா வேலையை பாக்காமே இங்க நிக்கிங்க.

கனகு:ஐயா வேலை முடிஞ்சு.

எஜமான்:அப்ப வீட்டுக்கு களம்பே வேண்டியது தானே..!!!!

கனகு:பிள்ளைக்கு டியூசன் காசு வாத்தி கேட்டு இருக்காரு,இன்றைய புளுங்களுக்கு வீட்ட அரிசியில்லே
கூழியே கொஞ்சம் போட்டு தாங்கலம்.

எஜமான்:(ஆத்திரமாய்) உன் தலையிலே கொட்டுதான் போடலாம்.(செயலில் ஜாடை காட்டல்) எண்ட மனைவி அவ கூட்டாலி வீட்டு கல்யாணத்துக்கு போக 5000 கொடுத்தும் காணாது என்று சண்டை செய்றா,
அதுக்குள்ளே கூலி கீலிண்டு வந்துட்டானுள்......,போங்கடா நாளைக்கு பார்ப்போம்.(எஜமானின் கூற்றால்
எதிர்பார்த்து மலர்ந்திருந்த கூலியின் முகம் வாடியது.பாரதி சிங்கம் போல் நடந்த வந்து சீறி பேசத் தொடங்கினார்)

பாரதி:"உன் மனையாளின் கெளரவ செலவுக்கு வியர்வை
சிந்திய கூலியின் உதிரம் தான் வேண்டுமா? பழுத்தப்பட்ட
கரங்களுக்கு மருந்தாய் கூலி கொடுக்காமல் களவாடி
ஏன்? அவனை நோவினை செய்கிறாய்.உன் வயிற்றுக்கு
மட்டுமா பசியா? உழைப்பாளி வயிற்றுக்கு பசிக்காதா?
(கூறிக்கொண்ட இவ்விரு உழைப்பாளியின் தோள்களில்
கரங்களை போட்ட வண்ணம்) அநீதியை தட்டிக்கேள அஞ்சாதே!
உரிமையை மீட்டெடுக்க தயங்காதே! தமிழச்சி வயிற்றில்
பாவீரன் செத்துவிட்டானா? அல்ல தமிழின் வீரக்காவியம்
செத்து விட்டதா?(உழைப்பாளி மனம் குளிர்கிறது.எஜமான்
தன் குற்றத்தை உணர்ந்து வருந்துகிறான்) (முற்றும்......)

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (4-Apr-15, 1:32 pm)
பார்வை : 878

மேலே