காதலனாக

கண்கள் உனைப் பார்த்த
கணநொடியில்
காதலியாகி என் இதயத்தை
களவு செய்கிறாய்...
கனவுகளில் நுழைந்து
கண்ணாமூச்சி ஆடுகிறாய்....
கற்பனையாய் நகரும் நாட்கள்
காதல் அவஸ்தையை சொல்கிறது...

கண்களால் கைது செய்தவள்,,
காதலனாக இதயத்தில்
குடியேற்ற மறுப்பதேனோ...!

எழுதியவர் : ஷாமினி குமார் (5-Apr-15, 11:02 am)
Tanglish : kathalanaga
பார்வை : 101

மேலே