காதலுக்கு ஓர் தாலாட்டு

ஆராரோ ஆரிரோ
என் காதலே நீ கண்ணுறங்கு
உடல்கள் தேயாமல்
வேர்வை சிந்தாமல்
கண்களின் தீண்டலால் பிறந்தவளே
எங்கள் தங்க ரத்தமே
காதலே நீ கண்ணுறங்கு

தாயின் மடியிலே நீ கண்ணுறங்கு
தந்தையின் அரவணைப்பில் நீ உறங்கு
குடிசையில் இருந்தாலும்
மாளிகையில் இருந்தாலும்
செல்வா மகளே
எங்கள் காதலே
உன்னை பற்றிக்கொண்டே இருப்போம்
நிம்மதியாய் நீ கண்ணுறங்கு

நீ கோபித்தாலும் நாங்கள்
பொறுமை காப்போம்
அழுது அடம்பிடித்தாலும்
உன்னை அணைத்து இதம் தருவோம்
அன்பெனும் சோறு ஊட்டி
பக்குவமாய் வளர்த்திடுவோம்
எங்கள் பவள செவ்வாயே
எங்கள் காதலே நீ கண்ணுறங்கு

பிறரை போல நீ இல்லை என்று
ஒப்பிட மாட்டோம்
ஒப்பனைங்கள் போடு உன்
சுயத்தை அழிக்க மாட்டோம்
வாழ்க்கை பந்தயத்தில் உன்னை
தள்ள மாட்டோம்
வேதனைகள் சூழ்ந்தாலும்
சந்தோசம் நிறைந்தாலும்
உன்னை பக்குவமாய் வளர்த்திடுவோம்

நரை இட்ட வயதுகளில்
நாங்கள் பிள்ளையாய் மாற
எங்கள் மல்லிகை செண்டே
தாயாய் நீ மாறி
வழிநடத்து

எங்கள் காதலே நீ
கண்ணுறங்கு

எழுதியவர் : (5-Apr-15, 10:25 am)
சேர்த்தது : ஆத்மதர்சனா
பார்வை : 60

மேலே