அகப்பிழை

உங்களின்
யவனம் மின்ன
வெண் பசைகளும்
வண்ணக்குழம்பிகளும் பூசி
தேகம் வெளுக்க
வெள்ளைக்கார ர்களாகி விட்டீர்கள் ...

அளவெடுத்த நியமங்களுடன்
சமரசமேதுமற்ற
நேர்த்தியான ஆடைகளும்
உங்களுக்கு மிகப்பொருந்துகிறது
வெகுகச்சிதமாய்...
முடிமுதல் அடிவரை
செயற்கை சாயம் தோய்த்து
புறவெளியில் மின்னுவது
நீங்களே தான் ...

மயக்கும் நெடியடிக்கும்
வாசனா திரவியங்களால்
உங்களின் எதையோ
மறைக்கப் பார்க்கிறீர்கள் ...
ஒப்பனைகள்
ஒருபோதும் அனுமதிப்பதில்லை
மதிப்பீடுகளின் மதிநுட்பத்தை ....
சிறுசுருக்குகளுமற்ற கழுத்துப்பட்டைகளும்
அப்பழுக்கற்ற காலணிகளுமாய்
திகைக்க வைக்கிறது
நனி சிறந்த - நும் திவ்ய தோற்றம்
நுனி நாக்கு ஆங்கிலத்துடன்
ஸ்வர்ணமயமாய்த் துலங்கும்
நீங்களும் உங்கள் சூழலும்
பிரமிக்க வைக்கிறது
அகமென்பது - எது வென்றறியும்
அகத்தை .

எழுதியவர் : பாலா (5-Apr-15, 10:24 am)
பார்வை : 89

மேலே