அருள் புரிவாய் இறைவா

அழகிய தமிழை
அள்ளி இறைத்து
படைத்த
கவியை செவி மடுத்து
கேட்டால்
அமுதமும் ஆறாய் பாயும்

ஈராறு உயிரோடு
முனாறு மெய் சேர்த்து
படைத்த கவியை
கேட்ட நேரம்
இறைவனிடம் சண்டையிட்டேன்
செவிகள் இரண்டு மட்டும்
எப்படி போதுமென்று
படைத்தாய் என்று.


ஆறாய் கொடுத்தாலும்
ஆறாது மனித மனம்
கடலாய் கேட்கவில்லை
துளியாய் கவி கொஞ்சும் மழையில்
நாளும் அதில் நனைந்திட கெட்கிறேன்..
அருள் புரிவாய் இறைவா!!!

எழுதியவர் : ரம்யா (8-Apr-15, 11:38 am)
பார்வை : 89

மேலே