எனக்காக அழுதவனே

எனக்காக அழுதவனே....!
»»»»»»»»»»»»»»»»»
முகவரியில்லா முகங்களை உன்
வரிகளில் வாழ வைத்தாய்.

காலணி விற்ற உன் கைகளால்
எங்கள் காலடி மாற்றி வைத்தாய்.

ஐந்தாம் வகுப்பில் பள்ளியை விட்ட நீ,
ஐம்பதில் கல்லூரி சென்றாய் பாடமாக...!
எண்பதிலோ நீ பல்கலைக்கழகம்..!!

மனிதத்தை உன் மதமென்றாய்
அன்பன்றோ வேதமென்றாய்
அன்பில் வழியும் கண்ணீர் அபிஷேக தீர்த்தமன்றோ...?!

எனக்காக அழுதவனே....
என் எழுத்துச் சிங்கமே....
உன் அழுத்தக் கர்ஜனையில்
அதிர்ந்திடும் நம் தமிழ்க் காடு...
எதிரொலித்திடும் அடங்காமல் என்றென்றும்...
~~ஆதர்ஷ்ஜி
.»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»
(எழுத்துச் சிங்கம் ஜெயகாந்தன் அவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலி படைப்பு)

எழுதியவர் : ஆதர்ஷ்ஜி (9-Apr-15, 7:46 am)
சேர்த்தது : ஆதர்ஷ்ஜி
பார்வை : 1285

மேலே