தயவு

நிலத்தடி நீரை எடுத்து
கனி தரும் மரமும்
மலர் தரும் செடியும்
கதிர் தரும் வயலும்
...

நீர் தரும் ஆறும்
மழை தரும் வானும்
ஒளி தரும் ஆதவனும்
இயற்கையில் எதுவும்..

..

பிறர் துணை நாடுவதில்லை!
தருவதெல்லாம் பிறருக்கே
என்றபோதும்.. !

..
தனக்கு வேண்டியதற்கே
பிறர் தயவினை நாடும்
மனிதனைப் போல் அல்லாமல்!

எழுதியவர் : கருணா (9-Apr-15, 10:58 am)
Tanglish : thayavu
பார்வை : 109

மேலே