நந்தன் நந்தினி

பெரியதாக கூட்டம் ஏதுமில்லை என்றாலும், சில காதலர்களும், தன் தந்தைகளுடன் சில குழந்தைகளும், சில குடும்ப அரட்டைகளும் நிறைந்திருந்த "காப்பி கஃபே" அது.

"என்னால முடிஞ்ச வரைக்கும் முயற்சி செய்து பார்த்துட்டேன், இனிமேல் என்னால் ஏதும் செய்யமுடியாது. நாம பிரிஞ்சிடலாம்"

"இப்ப என்ன நடந்ததுனு இப்படி பேசுற"

"இதுக்கு மேல என்ன நடக்கனும், கல்யாணத்திற்கு இன்விடேஷன் வந்துருச்சி. இன்னைக்கு எங்க அப்பா திருத்தின ப்ருஃபை பிரஸ்க்கு கொடுக்கப் போய்டார்"

"இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்ன??"

"ம்ம்ம் சரி சரி உன்னுடைய பிளான் என்னானு எனக்கு புரிஞ்சிடுச்சி"

"ஓய்... இப்ப என்ன புரிஞ்சது"

"எனைய விட்டுட்டு... வேற ஒருத்திய கல்யாணம் பண்ணிக்கலாமுனு நினைக்கிறீங்க"

"ம்ம்ம்ம் ஆமாம் நான் அப்படி தான் பண்ணபோறேன், என்ன நீ உங்க வீட்ட நம்ம விஷயத்தை பற்றி பேசலாமே"

"ம்ம்ம்ம் அது முடியவே முடியாது"

"ஒண்ணும் செத்துறமாட்ட.. உங்க வீட்ல சொல்லிடு"

"சொத்த பரவாயில்லே... உசிரோட எல்லாம் கொல்லாங்களே?"

"யாரு கொல்றது?? நானா??" அவன் கோபமோடு கேட்டான்.

"எல்லாரும்தான்" அவள் முகம் சோர்ந்து சொன்னாள்.

சிறிது நேரம் மௌனமாய் உட்கார்ந்தார்கள்.

கடையின் சர்வர் ஒருவன் கையில் ஒரு தட்டோடு இவர்களின் அருகில் வந்தான்.

"என்ன சாப்பிடறீங்க? சார்" என்று அவன் கேட்டான்.

"ரெண்டு காப்பி" என்று நந்தன் பதில் கூறினான்.

அந்த சர்வருக்கு இந்த பதிலும் புதிதல்ல.. இந்த ஜோடியும் புதிதல்ல... வாரம் இருமுறை இவர்களது சந்திப்பிடம் இது தான்.

"இப்ப என்ன தான் சொல்ல வர நீ"

"நான் என்ன சொல்றது, அதான் எல்லாமே சொல்லியாச்சு"

"இன்னொரு ரெண்டு மாசம் பொருத்துக்கோ.... அதுக்கு பிறகு நானே வந்து உங்க வீட்ல போசுறேன்"

"இனிமேல் எப்படி முடியும், என்னுடைய சூழ்நிலை உனக்கு புரியவேயில்லையா??

"புரியுது நந்தினி... ஆனா இன்னும் கொஞ்ச நாள்.... எதாவது பண்ணுடி"

"ஐய்யோ... ஒரு தடவ சொன்னா புரியாதா?? என்னால முடியாது"

"இதுக்கு ஒரே வழி தான் இருக்கு நந்தினி"

"என்ன வழி?? சீக்கிரம் சொல்லுங்க"

"உனக்கு ஒரு பிராபலம் இருக்கு... டாக்டர்'கிட்ட ட்ரீட்மெண்ட் எடுத்துடு இருக்கேன். இன்னும் ரெண்டு மாசம் ஆகும் இது சரியாக. அது வரைக்கும் கல்யாணம் வேண்டாமுனு சொல்லிடு... ஒரு டாக்டரை இதுக்கு ரெடி பண்ணிடுறேன்"

"நடக்கிற கதைய பேசுங்க"

சர்வர் ரெண்டு கப் காப்பியை எடுத்து வந்து டேபிள் மீது வைத்துவிட்டு சென்றான்.

சற்று நேரம் மௌனம் நிலவியது. காப்பி கப் சப்தங்கள் கேட்டது. ஆனால் நந்தன் மட்டுமே காப்பி குடித்தான். "நந்தினி... காப்பி சூடு போய்டும். எடுத்து சீக்கிரம் குடி" என்றான்.

"இப்ப காப்பி குடிக்க தான் இங்க வந்தமா" என்று கோபத்தோடு கத்தினாள்.

உடனே காப்பி கப்பை கீழே வந்துவிட்டு ஆழ்ந்த யோசனையில் மூழ்கினான்... கடையின் சுவற்றை வெறித்துப் பார்த்தான்.

அவன் குடும்பத்தைப் பற்றி சில நினைவுகள் அவளுள் வந்து போனது.

அடுத்த வாரம் ஊருக்கு போக வேண்டும். அம்மாவிடம் நடந்த எல்லாத்தையும் சொல்ல வேண்டும். நந்தினியை பற்றி நிறைய சொல்ல வேண்டும். இந்த வாரம் விடுமுறை கிடைத்தால்... இந்த வாரமே ஊருக்கு போய்டலாம்... ஆனால் கிடைக்குமா.... என்று தெரியவில்லை. அம்மாக்கு எதாவது வாங்கிட்டு போகனும். அப்பா இறந்து போனதுக்கு அப்பறம் எனக்காக எவ்வளவு கஷ்டப்பட்டுருக்காங்க. அம்மாக்கு நந்தினியை பிடிக்குமா?? பிடிக்காவிட்டால் என்ன செய்வது.போன வாரம் தான் தங்கைக்கு கல்யாணம் நடந்தது. கல்யாணத்திற்கு முன்னாடியே நந்தினி பற்றி அம்மாகிட்ட சொல்லிருப்பேன். எங்க நான் ஏதாவது சொல்லி தங்கை கல்யாணத்திற்கு எதாவது பிரச்சினை வந்துடுமோனு தான் நான் சொல்ல...இப்பவும் ஒண்ணு கெட்டு போகல... அம்மாகிட்ட சொன்னா... புரிஞ்சிப்பாங்கனு தோனுது. இருந்தாலும் முன்னாடிய சொல்லிருந்தால் நந்தினிக்கு இந்த நிலமை வந்திருக்காது. நான் வந்து அவங்க வீடுல பேசிருப்பேன். என்ன மன்னிச்சுடு நந்தினி... உன்ன கண்டிப்பா கைவிட மாட்டேன்.

நந்தன் நந்தினியை பார்த்தான். அவள் கையில் காப்பி கப்பை வைத்துக் கொண்டு. எதையோ யோசித்தபடி இருந்தாள்.

வீடிற்கு மூத்த பிள்ளை நான் தான்... எனக்கு பிறகு இரண்டு தங்கைகள் வேற இருக்காங்க... என்னுடைய காதல கல்யாணம் நிச்சம் பண்றதுக்கு முன்னாடி சொல்லிருந்தாவே... அடிச்சி கொன்றுப்பாங்க.... கல்யாண இன்விடேஷன் அடிச்ச பிறகு சொன்னா.. அவ்வளது தான்... யார்கிட்டயும் சொல்லாம.. நந்தன் கூட ஓடி போய்டலாமா?? ஐய்யோ வேண்டவே வேண்டாம்... எங்க குடும்ப மானம் போய்டும்.. அப்புறம் ரெண்டு தங்கச்சிகளுக்கும் கல்யாணம் எப்படி நடக்கும். என்ன செய்றதுனே தெரியல... நந்தன்கிட்ட சொல்லிட வேண்டியது தான் இது சரிவராதுனு...

அவளது மௌனம் உடைக்கும்படி அவள் கைப்படித்து " நந்தினி என்ன முடிவு பண்ணிருக்க" என்று மென்னையாக கேட்டான் நந்தன்.

"எனைய விட்டுட்டு வேற யாரையாவது பாத்துக்கோங்க"

"என்னடி சொல்ற?" நந்தன் கோபத்தில் கத்தினான். சில நொடிகளுக்கு பிறகு குரல் தாழ்த்தினான்."உன்ன விட்டுட முடியாதுடி... நீயில்லேனா நான் செத்துடுவேன்"

"இது பைத்தியக்காரத்தனம்"

"நீயில்லாம என்னால எதும் செய்ய முடியாது... ரெண்டு நாளா தூக்கவே முடியல... ரூம்ல தனியா புலம்பிட்டு கிடக்குறேன்"

"இதையே தான் நான் ரெண்டு மாசமா பண்ணிட்டு இருக்கேன்... இனிமே என்ன பண்ண முடியும்... எனக்கு நம்பிக்கையில்லை... அவரையே கல்யாணம் பண்ணிகிறேன்..
எனைய விட்டுங்க"

"அதுக்குள்ள மனசு மாறிட்டியா? நீ இல்லாம நான் செத்துருவேன் நந்தினி.... உன்ன நினைச்ச மனசே எனைய கொஞ்ச கொஞ்சமா கொன்னுடும்... என்னைய விட்டு போயிடுவியா?அவ்வளவு தானா?? நான் யாரு காலைப் புடிச்சு வேணாலும் கெஞ்சறேன்... எனக்கு நீ வேணும் அவளோ தான்"

"தேவையில்லாம பேசாதீங்க.... நான் முதல் சொன்னத தான் இப்பவும் சொல்றேன்.... நான் அவரையே கல்யாணம் பண்ணிகிறேன்.... தயவு செய்து என் வாழ்க்கைய கெடுத்திடாதீங்க.... என்னைய நிம்மதியா இருக்க விட்டுங்க... நீங்க ஏன் மத்தவங்க காலைப் பிடிச்சு கெஞ்சி... என்னக்காக உங்க தன்மானத்த இழக்கனும்.... வேண்டாம்... நான் உங்க காலைப் பிடிச்சு கொஞ்சறேன்... தயவு செய்து என்ன விட்டுட்டு போய்டுங்க" என்றாள் மிகுந்த கோபத்தோடு.

சடேரென்று நாற்காலி உதறி அவன் எழுத்தான்.... என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றான்...அனைவரது பார்வைகளும் இவன் மேல் திரும்பியது... பிறது அவர்களது வேலையை பார்க்க தொடங்கினர்.


நந்தினியின் அலைபேசி அலறியது.... பதற்றத்துடன் கையிலெடுத்து... பேசினாள்... மறுமுனையில் அவளது தந்தை " எங்கமா இருக்க?? திருத்தின ப்ரூஃபை பிரஸ்ல கொடுத்திடேன்.. நாளைக்கு மதியம் வந்து வாங்கிங்க சொன்னாங்கமா.... அவரு பக்கத்துல தான இருக்கார்... அவர்கிட்ட கொடு மா...

நந்தன் அலைபேசியை வாங்கி "ஹலோ" என்றான்.

"உங்களுக்கு பிடிச்ச மாதிரியே இன்விடேஷன் பிரிண்ட் பண்ண கொடுத்தாச்சி மாப்பிள... அம்மாகிட்ட சொல்லிடுங்க.... இன்னைக்கு நந்தினி கூடவே வீட்டுக்கு வாங்க மாப்பிள பேசிக்கலாம்... நான் வைக்கிறேனு... அழைப்பை துண்டித்தார்.

சிறு நேரம் இருவரும் பேசவில்லை.... சட்டென்று நந்தினி சிரித்தாள்...நந்தனும் புன்னகைத்தான்....

"இந்த மாதிரியான சூழ்நிலை நமக்கு வந்த எப்படிருக்குமுனு.... சும்மா நடிக்க சொன்னா.... செம்மையா பண்ற.... காலப் பிடிச்சு கெஞ்சுவேனு...." என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.

"நான் நடிச்ச கூட உன்ன விட்டு போக மாடேனு தான் நான் சொன்னேன்... ஆனா நீ என்ன விட்டுட்டு போனா சொல்ற.... உனக்கு இருக்குடி கல்யாணத்திற்கு அப்புறம்" என்றான் அவன்.

"இவரால இப்பவோ ஒண்ணு பண்ண முடியலயாம்... இதுலவேற கல்யாணத்திற்கு அப்புறம் பண்ணுவாராம்"

"சரி இதோட போதும்... வா நாம போயி கல்யாண வேலைய பாப்போம்" என்று நந்தன் கூறி.... நந்தினை அழைத்து... அவளது கைவிரலை பற்றி.... அவளை அழைத்துச் சென்றேன்.

இரண்டு மாதம் கழித்து இவர்களது திருமணம் சிறப்பாக நடந்தேறியது. இவரும் மகிழ்ச்சியாக தங்களது இனியதோர் புது வாழ்க்கையை ஆரம்பித்தனர்.

எழுதியவர் : கோபி (9-Apr-15, 3:18 pm)
Tanglish : nanthan nanthini
பார்வை : 311

மேலே