காத்யாயினி

காத்யாயினி

செல்வராஜ் என்ற

செல்வா தன் அம்மாவுடன் காத்யாயினியைப் பெண் பார்க்க வந்திருந்தான்.காத்யாயினியோ மனமெல்லாம் மகிழ்ச்சியில் நிரம்பியிருந்தாள்.அவளின் அப்பா, அம்மா இருவர் முகத்திலும் அவ்வளவாய் சந்தோஷத்தைக் காணோம்.இருந்தாலும் மகள் விரும்பிவிட்டாள் என்று அரை மனதாக சம்மதித்திருந்தார்கள்.

செல்வாவின் அம்மா,"நீங்க கவலைப் படாதீங்க.சீக்கிரமே எங்க செல்வா வேலை தேடிப்பான்.உங்க மகளை கண் கலங்காமல் காப்பாற்றுவான்.என்னடா செல்வா?"

செல்வா புன்னரெண்டு மாசம் இருக்கு.அதுக்குள்ளே உங்களுக்கு வேலை கிடைச்சிடுமில்லே?"

செல்வா,"ஆ.....ங்....கி......டைச்சி..டும்" காத்யாயினியின் அப்பா,அம்மா இருவரும் செல்வாவின் பதிலில் குழம்பிப் போனார்கள்.அவர்கள் கிளம்பிப் போனதும் காத்யாயினியிடம்,"மாப்பிள்ளை பிடி கொடுக்காமல் பேசிட்டுப் போறார்மா.தெளிவாக் கேட்டுவிடு.அப்பதான் எங்களுக்கு கொஞ்சம் நிம்மதி.உனக்காகத்தான் நாங்க இந்த கல்யாணத்திற்கு சம்மதிக்கிறோம்

திரிசூலம் மலையில் அந்த பாழடைந்த மண்டபத்தில் அவர்கள் பத்து பேர் கூடியிருந்தனர்.ஆந்திராவில் நக்சல் போல இவர்களும் ஒரு தீவிரவாதக் கூட்டம். ஆனால் இவர்கள் தங்களை நல் இயக்கத் தோழர்கள் என்று கூறிக்கொள்வார்கள். இன்னும் போலீசிற்கு இவர்கள் மேல் அத்தனை சந்தேகம் வரவில்லை.சும்மா போரட்டம் நடத்துபவர்கள் என்றே நினத்துக் கொண்டிருக்கின்றனர்.இவர்களை இயக்குவது வட இந்தியாவில் உள்ள இயக்கம். இவர்களின் நோக்கம் அரசியல்வாதிகளையும், பெரிய பணக்காரர்களையும் கூண்டோடு ஒழிப்பது என்பது.இப்பவும் அதற்காகத்தான் கூடி உள்ளார்கள்.

கூட்டத்தை வழி நடத்துபவன் ராது,"வர்ற பத்தாம்தேதி நாம வேலை செய்ய மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருக்கு."

டேவிட்," இந்த முறை ஸ்பாட் எங்கே?"

ராது," பொருட்காட்சி.பத்தாம் தேதி பொருட்காட்சியில் ஒரு அரங்கை திறக்க மந்திரிகளும் பெரிய அதிகாரிகளும் பண முதலைகளும் கலந்துக்கிறாங்க.அதுதான் நம்ம ஸ்பாட்.எப்படி செய்யப்போறோம்னா......"
இஸ்மாயில்," என்ன அந்த அரங்குக்கு அத்தனை சிறப்பு? "

ராது," ஆளுங் கட்சியின் சாதனைகளும், முதல்வரின் திட்டங்களும் படக்காட்சிகளாக திரையிடப்படும் அரங்கு அது. அதில் கலந்துகிட்டா முதல்வரிடம் நல்ல பேரு வாங்கிடலாம்னு அத்தனை பெரும் புள்ளிகளும் கலந்துக்கப் போறாங்க. நமக்கு நல்ல சான்ஸ்."

மாரி ஆச்சரியமாக,"இங்கே நடக்கப் போறது எப்படி மேலிடத்திற்குத் தெரிந்தது?"

"அதுதான் மேலிடம். சரி இப்ப நாம எப்படி இதைப் பண்ணப் போறோம்னு பேசலாமா?" எல்லோரும் தலையாட்டி கவனிக்க ஆரம்பித்தனர்.

ராது," நாம எல்லாரும் ஸ்பாட்டில் இருப்போம். பட் செய்யப்போறது நம்ம செல்வா." அனைவரும் கைதட்டினர்.செல்வா பெருமிதமாய் தலையாட்டி ஏற்றுக்கொண்டான்.


வைப்பான்.நாம கொஞ்ச நேரம் பொருட்காட்சியை சுற்றிவிட்டு வேனுக்கு வந்துடுவோம்.வேன் கிளம்பி பத்தாவது நிமிஷம் ரிமோட் பட்டனை அழுத்திட்டா அரங்கத்தோடு அத்தனை பேரும் க்ளோஸ்." எல்லோரும் கைதட்டி ஆர்ப்பரித்தார்கள்.


செல்வா பீச்சில் காத்திருந்தான்.பதினைந்து நிமிடம் கழித்து காத்யாயினி வந்தாள்."ஏன் இவ்வளவு லேட்? உனக்காக காத்திருக்கிறதுதான் என் வேலையா?"எரிச்சலாக செல்வா கேட்டதும், "சாரி சாரி ப்ளீஸ் கோபப்படாதீங்க."

"அப்பாவியா முகத்தை வச்சு வச்சே என்னை மயக்கிட்டே.என்ன பண்றது வசமா மாட்டிக்கிட்டேன்."என்று பொய்யாக கவலைப்பட்டான்.

"நீங்க மட்டும் என்ன? அலட்டிக்காம டாமினேட் பண்ணிப் பன்ணியே என்னை காதலிக்க வச்சுட்டேங்க.உங்க தைரியம்,மேன்லினஸ் இதெல்லாம் பார்த்துதான் நான் அசந்து போனேன்.பெண் பார்க்க வந்த போது கூட எங்க அப்பா, அம்மாவைக் கன்வின்ஸ் பண்ணணுமேங்கிற கவலையில்லாம பிடிகொடுக்காமல் பேசிட்டு வந்துட்டீங்க."

செல்வா சிரிப்புடன்,"நானா? என்ன பிடிகொடுக்காமல் பேசினேன்?"

"எங்கப்பா உங்களுக்கு வேலை எப்ப கிடைக்கும்னு கேட்டதிற்கு சரியா பதில் சொல்லாமல் வந்துட்டிங்க."
"அதுவா? உங்கப்பாவுக்கு ரொம்ப சந்தேகம் வருது.நான் என்ன பண்ண?"

"சரி.எங்கிட்டேயாவது சொல்லுங்க. எப்ப வேலை கிடைக்கும்னு"

"வேலை இல்லேன்னா என்னை கல்யாணம் பண்ணிக்கமாட்டே இல்லே?" கோபமாகக் கேட்டான்.

"எப்ப வேலை பத்தி பேசினாலும் கோபப்படுறீங்க.நாம சந்தோஷமா குழந்தை குட்டி குடும்பம்னு வாழ பணம் வேண்டாமா?"

செல்வா மனதுள் பேசினான்,'என் இயக்கத்தைப் பொறுத்தவரை கல்யாணம் பண்ணிக்கலாம். ஆனா குழந்தை பெத்துக்கக் கூடாது.கல்யாணத்திற்கு முன் நான் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் பண்ணிக்குவேன்.உங்கிட்டே உண்மை ஏதும் சொல்லாமலே உன்னை கல்யாணம் பண்ணிக்கப் போறேன் காத்யாயினி. ஏன்னா உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.உண்மையைச்சொல்லி உன்னை இழக்க எனக்கு மனசில்லை.என்னை "அதுவா? உங்கப்பாவுக்கு ரொம்ப சந்தேகம் வருது.நான் என்ன பண்ண?"

"சரி.எங்கிட்டேயாவது சொல்லுங்க. எப்ப வேலை கிடைக்கும்னு"

"வேலை இல்லேன்னா என்னை கல்யாணம் பண்ணிக்கமாட்டே இல்லே?" கோபமாகக் கேட்டான்.

"எப்ப வேலை பத்தி பேசினாலும் கோபப்படுறீங்க.நாம சந்தோஷமா குழந்தை குட்டி குடும்பம்னு வாழ பணம் வேண்டாமா?"

செல்வா மனதுள் பேசினான்,'என் இயக்கத்தைப் பொறுத்தவரை கல்யாணம் பண்ணிக்கலாம். ஆனா குழந்தை பெத்துக்கக் கூடாது.கல்யாணத்திற்கு முன் நான் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் பண்ணிக்குவேன்.உங்கிட்டே உண்மை ஏதும் சொல்லாமலே உன்னை கல்யாணம் பண்ணிக்கப் போறேன் காத்யாயினி. ஏன்னா உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.உண்மையைச்சொல்லி உன்னை இழக்க எனக்கு மனசில்லை.என்னை
"அதுவா? உங்கப்பாவுக்கு ரொம்ப சந்தேகம் வருது.நான் என்ன பண்ண?"

"சரி.எங்கிட்டேயாவது சொல்லுங்க. எப்ப வேலை கிடைக்கும்னு"

"வேலை இல்லேன்னா என்னை கல்யாணம் பண்ணிக்கமாட்டே இல்லே?" கோபமாகக் கேட்டான்.

"எப்ப வேலை பத்தி பேசினாலும் கோபப்படுறீங்க.நாம சந்தோஷமா குழந்தை குட்டி குடும்பம்னு வாழ பணம் வேண்டாமா?"

செல்வா மனதுள் பேசினான்,'என் இயக்கத்தைப் பொறுத்தவரை கல்யாணம் பண்ணிக்கலாம். ஆனா குழந்தை பெத்துக்கக் கூடாது.கல்யாணத்திற்கு முன் நான் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் பண்ணிக்குவேன்.உங்கிட்டே உண்மை ஏதும் சொல்லாமலே உன்னை கல்யாணம் பண்ணிக்கப் போறேன் காத்யாயினி. ஏன்னா உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.உண்மையைச்சொல்லி உன்னை இழக்க எனக்கு மனசில்லை."
"வேலை தேடிக்கிட்டுதான் இருக்கீங்க.சரி மத்த நேரங்களில் என்ன பண்றீங்க?"

செல்வாவிற்கு திக்கென்றது.'ஆஹா இவள் கேட்கக்கூடாததைக் கேட்கிறாளே 'என்று நினைத்தவன் சட்டென்று அவளிடம்,"நானும் உங்கிட்டே ஒண்ணு கேட்கணும்."

அவள்,"என்ன?"

"அதென்ன காத்யாயினி ?"

அவள் சிரித்து,"இவ்வளவுதானா?இது அம்பாளோட பேர்களில் ஒண்ணு.லலிதாசகஸ்ர நாமத்தில் வரும்."

" காத்யாயினிக்கு அர்த்தம் என்ன?" அவன் கேட்டான்.

"தெரியலையே."

"அடுத்தமுறை வரும்போது தெரிஞ்சுட்டுவா."

காத்யாயினி தலையாட்டினாள்.இருவரும் கிளம்பினார்கள்.


அன்று பத்தாம் தேதி.பொருட்காட்சி திடலில் கூட்டம் நிரம்பியிருந்தது.காத்யாயினி தன் தோழிகளுடன் நுழைவுச்சீட்டு வாங்குவதற்காக வரிசையில் நின்றிருந்தாள்.அப்போது செல்வா தன் கூட்டாளிகளுடன் வேனில் வந்து இறங்கினான்.காத்யாயினிக்கு அவனைப் பார்த்ததும் சந்தோஷம் பொங்கியது.தன் தோழிகளுக்கு அவனைத் தன் வருங்கால கணவன் என்று அறிமுகப்படுத்தலாம் என எண்ணினாள்.செல்வா அவளைப் பார்க்கவில்லை.முகமெல்லாம் டென்ஷனுடன் கையில் ஏதோ பேக்குடன் நின்றிருக்க அவன் நண்பர்கள் டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே செல்ல செல்வாவும் சுற்றிமுற்றி பார்த்தபடி போனான்.காத்யாயினிக்கு ஆச்சரியமாய் இருந்தது. பொருட்காட்சியைச்சுற்றிப் பார்க்க வந்தவன் போலத் தெரியலையே.காத்யாயினி தோழிகளுடன் உள்ளே வந்தவள்,"நீங்க சுற்றிப் பார்த்துட்டு மினி டிரெயினுக்கு வந்துடுங்க.நான் அங்கே வந்திடுவேன்."என்று கூட்டத்திற்குள் சென்றாள்.செல்வா அவன் கூட்டத்தாரைக் கண்டு அவர்கள் பின்னால் ஒளிந்து ஒளிந்து சென்றாள். குறிப்பிட்ட அந்த அரங்குக்கு அருகே வந்ததும் செல்வா மட்டும் பேக்குடன் ஒலிபெருக்கி வைத்துக் கொண்டிருப்பவர் அருகில் சென்று,"என்ன அண்ணே வேலை எல்லாம் நல்லா நடக்குதா?"

அவர்,"நீங்க....யாரு தம்பீ?"

"நான் கட்சி ஆளுங்க,வேலை ஒழுங்கா நடக்குதான்னு பார்க்க வந்தேன்."

"அப்படியா தம்பீ.பாருங்க பாருங்க.நான் டீ சாப்பிட்டுவந்துடுறேன்.கொஞ்சம் பார்த்துக்கிறீங்களா?"

"ரொம்ப நல்லதாப் போச்சு. போயிட்டு வாங்க நான் பார்த்துக்கிறேன்."

அவர் எழுந்து போக எத்தனித்த போது அவரே,"என்ன தம்பீ நல்லதாப் போச்சுன்னு சொல்றீங்க?"

செல்வா தடுமாறி,"நீங்க டீ சாப்பிட நான் உதவறேன் இல்லே அதச்சொன்னேன்.நீங்க போயிட்டு வாங்க" அவர் சிரித்தபடி போனார். செல்வா பெருமூச்சு விட்டு தள்ளி நின்றிருந்த கூட்டாளிகளைப் பார்த்துக் கட்டைவிரலை தூக்கிக் காட்டினான். காத்யாயினி பார்த்துக் கொண்டு இருந்தாள்.செல்வா நடந்து திறக்கப்படப் போகிற அரங்கின் அருகே போடப்பட்டிருந்த மேடையின் பின்புறம் சென்றான். சிறிது நேரம் அவனைக் காணவில்லை.ஒரு சில வினாடிகளுக்குப் பிறகு செல்வா வந்தான். அவன் கையில் அந்த பேக் இல்லை.காத்யாயினிக்கு குழப்பமாக இருந்தது.'என்ன பேக் அது?ஏன் அங்கே வைத்துவிட்டு வருகிறான்?அதற்கு ஏன் பயந்து பயந்து போகணும்?இப்படி பயப்படுபவன் இல்லையே.அப்படி அந்த பேக்கில் என்னதான் இருக்கிறது?எடுத்து பார்த்தால் என்ன? ' காத்யாயினி அவர்கள் அங்கிருந்து சென்றதும் அந்த மேடைக்கு அருகில் வந்தாள்.செல்வா சென்ற இடத்திற்கு வந்து பார்த்த போது அந்த பேக் மறைவாக வைக்கப்பட்டிருந்தது.அதை எடுத்தாள்.அப்போது ஒலிபெருக்கி வைப்பவர் டீ குடித்துவிட்டு வந்தார்."யாரும்மா நீ?இங்கே என்ன பண்றே?" என்றதும் காத்யாயினி ஒரு நிமிடம் யோசித்து,"இப்ப வந்தாரே.அவரு இந்தப் பையை எடுத்துட்டு வரச்சொன்னார்."

"சரி சரி போ. இந்தப் பக்கம் வரக்கூடாது. போலீஸ் காரங்கப் பார்த்தா திட்டுவாங்க."

காத்யாயினி சற்று தள்ளி வந்து பேக்கைத் திறந்து பார்த்து அதிர்ந்தாள்.ஒயர்களுடன் அதில் டயம் ஓடிக் கொண்டிருந்தது.'இ...து.....என்ன......வெ...டிகுண்டா.....வெடிக்கப் போகிறதா?இதை செல்வா ஏன் வைத்துவிட்டுப் போனான்? ' காத்யாயினிக்குத் தலை சுற்றியது.அப்படியே தரையில் உட்கார்ந்துவிட்டாள்.கண்ணீர் ஆறாகப் பெருகியது.தான் ஏமாந்தது போல ஒரு உணர்வு.நாசவேலை செய்றவன் கூடவா இத்தனை நாள் பழகி..........சே....சே....எல்லாத்தையும் எங்கிட்டே சொல்லாம என்னை பொண்ணும் கேட்டு வந்தானே பாவி.'

அப்பொது காத்யாயினியின் தோழிகள் வந்தனர்."ஏய் இங்கே ஏண்டி உட்கார்ந்து இருக்கே?ஏன் என்னாச்சு? ஏன் அழறே?"

காத்யாயினி கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சமாளித்து,"நா...ந்..நான் அழல.தூசி விழுந்துட்டுது.காலில் முள்ளு குத்திட்டுது.அதான் உட்கார்ந்துட்டேன்."

"முள்ளுதானே. தூக்கிப்போட்டுவிட்டு வா."`

"தூக்கிப்போட்டிட வேண்டியதுதான்."

"இன்னும் தூக்கிப் போடலையா? அது சரி இது என்ன பேக்? யாருடையது? "

காத்யாயினி, "தெ...ரிஞ்சவங்க.....பேக்."

"கொடுக்கணுமா?"

"அதான் யோசிக்கிறேன்."

"இதில் என்ன யோசிக்க இருக்கு? உனக்கு தெரிஞ்சவங்க ஏதும் வண்டியில வந்திருந்தா வண்டி நிற்கிற இடத்தில் போய் வெயிட் பண்ணினா கொடுத்துடலாம்."

காத்யாயினிக்கு பளிச்சென்று ஒரு யோசனை உதித்தது."நீங்க எல்லாரும் போங்க நான் வந்துடறேன்.நாளைக்கு பார்க்கலாம்."என்று கூறிவிட்டு வேகமாய் நடந்தாள்."இவ ஏண்டி இப்படி நடந்துக்கிறா?இங்கே எதுக்கு வந்தா?சரி வாங்க போகலாம்." காத்யாயினி மிகவும் வேகமாய் நடந்தாள்.இந்த வெடிகுண்டு எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்.அதற்குல் இந்த கூட்டத்திலிருந்து வெளியே போய்விடவேண்டும்.அவர்களின் வேன் அருகே வந்தாள்.வேன் அருகே யாருமில்லை.வேன் கதவின் கைப்பிடியைத் திருப்பினாள்.திறந்துகொண்டது. உள்ளே ஏறி பின் சீட்டின் அடியில் மறைவாக அந்த பேக்கை வைத்துவிட்டு இறங்கி சற்று தள்ளி மறைந்து நின்று கவனித்தாள். நேரம் ஓடிக் கொண்டிருந்தது.பத்து வினாடிகள் கழிந்த போது செல்வா தன் கூட்டாளிகளுடன் வந்தான்.எல்லோரும் வேனில் ஏறி அமர்ந்தார்கள்.காத்யாயினிக்கு எங்கிருந்தோ ஒரு ஆத்திரம் வந்தது.வேகமாய் ஜன்னல் அருகே அமர்ந்திருந்த செல்வாவிடம் வந்தாள்.செல்வா இவளைப் பார்த்ததும் பதறிப் போனான்." என்ன......நீ.....எங்கே....இங்கே....எப்.....படி.......வந்......வந்தே? இங்கிருந்து போயிடு.போ சீக்கிரம் போ."முகமெல்லாம் பயம்.வியர்த்துக் கொட்டியது. காத்யாயினி அமைதியாய்,"போறேன் போறேன்.அன்னிக்கு காத்யாயினிக்கு அர்த்தம் கேட்டீங்களே அதச்சொல்ல வந்தேன்." செல்வா நெற்றி சுருங்கப் பார்த்தான்.அவனுக்கு டென்ஷன் கூடிக்கொண்டிருந்தது.வேன் டிரைவர் கண்ணாடியைத் துடைத்துக் கொண்டிருந்தான்.

காத்யாயினி நிதானத்துடன்,"காத்யாயினி பார்வதியோட பேரு.உலகத்தைக் காப்பவள்னு அர்த்தம்.அதத்தான் இப்ப நான் பண்ணிருக்கேன்."என்று கூறிவிட்டு வேகமாய் நடந்தாள்.கண்ணீர் பெருகியது.தான் உயிராய் நினைத்தனுக்கு சமாதி கட்டிவிட்டு வந்ததில் ஒருபுறம் துக்கம் மறுபுறம் ஆத்திரம் அடங்கி மனசில் எதையோ சாதித்துவிட்ட உண்ர்வு.வெகுதூரம் வந்த பின் திரும்பிப் பார்த்தாள்.வேன் புறப்பட்டுப் போயிருந்தது.

எழுதியவர் : வள்ளிராஜா (9-Apr-15, 3:44 pm)
பார்வை : 295

மேலே