அன்பே அன்பே

பூவே
தென்றலாய்
வந்து
வருடி விடு
அரும்பாய்
விழிகள் இரண்டும்
மலர்ந்திட
விடிவானம்
விதைக்கும்
மெளனத்தை
பட்சிகள்
கொள்ளையடித்து
தனிமை
எனும் இதழை
நெஞ்சின் ஓரம்
வளர்பிறையாய்
உதிக்கச் செய்வது
போல
மெல்லிசையாய்
மேலுதடும்
கீழுதடும்
உன்
பெயரை
சுவாசித்து
மறதியில்
கூட -உன்
நினைவு
பக்குவமாய்
உள்ளத்தில்
உறைய
ஏக்கங்கள்
கை மீறி
நீண்டு செல்ல
பகலிலும்
கனவு
கட்டுக்கடங்காமல்
பிறக்க
தயக்கங்கள்
செலவு
இன்றி
அருகினில்
உறங்க
வெந்நீராய்
கன்னங்களில்
வியர்வை
வழிய
சுகமாய்
ஒரு
புன்னகை
பூமகள்
நான் தாங்கி
உதயமான
உன்
நினைப்புகளுக்கு