வாழ்வாகும்
வாழ்வாகும்....!
தொட்டிலில் ஆடிய
அட்டைக் கிளியின்
அதிசயம் பார்த்தும்....!
சுற்றி சுழலும்
வட்டச் சரத்தின்
சர சர பட. பட ......
ஓசையை கேட்டு
அழுகையை
தொலைத்தும்....!
தாயை தழுவி
சுவரை பிடித்து
எழுந்து நடைவண்டி
தொட்டு நகர்ந்து சென்றதும்.....!
ஒழுங்காய் செதுக்கிய
மரப்பாச்சி
சுமந்து திரிந்து
அயர்ந்து உறங்கியதும்.....!
நெஞ்சின் இசைவாய்
கொஞ்சும் பொருளை
விளையாண்டு
உடைத்து கதறியதும்......!
அனித்தான்..! ஆபியம்..!
தாண்டியும்....!
அடுத்த தெரு வரை
ஓடியும்.....! ஒளிந்தும்.....!
பள்ளியில் பயிலப்
படையோடு போனதும் .....!
கோலிக் குண்டு.....! பம்பரம்.....!
பாம்பு ஏணிப் பரமபதம்.....!
இச்சா இனியா...! கண்ணாமூச்சி....!
கிச்சு கிச்சு தம்பளம்....!
பாண்டி...! தாயம்.... ! உப்பாரி.....!
பன்னாங் குழியும் .....!
நொண்டி.....! நீச்சல்......!
ஐந்தாங்கல்.....!
செலவே யில்லா -
நுங்கு வண்டி.....! செக்கு மட்டை
பூவரசு ஊதல்.....! கிட்டிபுல் .....!
யென -
பொழுது போவதே
தெரியாமல்....
ஆடிப் பாடிய
அமுத பொழுதே
வாழ்வாகும்....!