கல்லூரியின் கடைசி நாளில்

இந்த வருடத்தோடு படிப்பை முடித்து , கனவுகளோடு களித்திருந்த கல்லூரி வாழ்க்கையின் கதவுகளை மூடி , நிஜ வாழ்க்கையின் கதவுகளை திறந்து , கண்ட கனவுகளை நிஜமாக்க , கண்களை திறந்து கனவுகள் களைந்து , காலடி வைக்க போகும் எனது குழந்தைகளே....

நண்பர்களை பிரிய போகும் இந்த நேரம் சிறிது கடினமானதுதான்,,,,
ஆடி பாடி திரிந்து சென்ற கல்லூரி வாசலை இனி ஆசையாய் மட்டுமே மிதிக்க முடியும்,,
ஆசிரியர் பாடம் நடத்தும் போதும் வரும் தூக்கத்தை கண்ணை திறந்து கொண்டே தூங்கிய இடங்களை இனி வெளியில் நின்றுதான் பார்க்க முடியும்...
output வரவில்லை என்றாலும் கோட் போடாமல் ஷூ போடாமல் போய் நின்று வாங்கிய திட்டுகளையும் எழுதிய அப்பாலஜி களையும் அதற்காக தயார் செய்த பொய்களையும் இனி நினைத்து மட்டுமே பார்க்க முடியும்....
9.30 காலேஜ்க்கு 9.15 எழுந்து ஹாஸ்டலில் இருந்து ஓடி 9.35 கு சேர்ந்து வெளியில் நின்று வேடிக்கை பார்த்த காலங்கள் இனி வரப்போவது இல்லை...
ஆயிரம் வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம் ஒதுக்கி வைத்து association வேலைகளை செய்த நேரங்கள் இனி திரும்ப போவதில்லை,,,,
ஹாஸ்டல் வார்டனிடம் சண்டை போட்ட தருணங்கள்...
மூன்று நாள் விடுமுறைக்காக நான்கு நாட்களுக்கு முன்பே தயார் ஆகும் வேளைகள்...
ஆட்டம் பாட்டம் என்று களித்திருந்த ஆண்டு விழாக்களும் , நண்பர்களுக்காக கூடவே இருத்த Placement டே வும், ஆரோக்கியமான போட்டியை வளர்த்த cultural டே க்களும் , வெட்டியாய் சுற்றி திரியும் நேஷனல் conference களும், இன்டர்நேஷனல் conference களும் இனி கிட்டப்போவதில்லை...
தெரிந்தும் தெரியாமலும் எழுதிய தேர்வுகள்... அதன் முடிவுகளை எதிர் நோக்கி காத்திருந்த திக் திக் நாட்கள் இனி திரும்ப போவதில்லை...
சண்டே என்றால் 12 மணி வரை தூக்கம், நண்பர்களுடன் அரட்டை , வெட்டி பேச்சு , கூட்டமாய் கும்மாளமாய் செமினார் ஹாலில் பார்த்த படங்கள்...
இரண்டு , மூன்று , நான்கு நாட்கள் என்று உலகமே மறந்து நண்பர்களே உலகம் என்று சென்று வந்த கல்வி சுற்றுலாக்கள் , அங்கு வாங்கி வந்த பொருட்கள் இவை எல்லாம் இனி புகைப்படங்களாக மட்டுமே உங்களிடம்....
நண்பர்களுடன் கல்லூரி கேண்டீன் , ஹாஸ்டல் மெஸ் என்று தின்று தீர்த்த தருணங்கள் எல்லாம் இன்று கண் முன்னே கண்ணீராய் வந்து போக...
இனி நீங்கள் கொண்டாட(?) போகும் ஒரே நாள் உங்களின் farewell டே மட்டுமே.......

நண்பர்களே மேலே சொன்ன எல்லாமும் இதுவரை கல்லூரி சென்ற எல்லோருக்கும் வந்து சென்ற அனுபவங்களே....

கவலை இல்லாமல் கழித்த காலங்களை நினைத்து கவலைபடாதீர்கள்....
இந்த கல்லூரி காலங்கள் உங்களுக்கு கற்று கொடுத்த நன்மைகளை உங்களோடு வைத்து கொண்டு தீமைகளை தீ வைத்து , நண்பர்களை கூட வைத்து, எதிரிகளாய் நினைத்தவர்களை நண்பர்களாக்கி, வரும் காலங்களை எல்லாம் வசந்த காலங்களாக்கி , எதிர் காலத்தில் எதிரிகளே இல்லாமல் வரப்போகும் ஏற்றம் மிகு நாட்களை எதிர் கொள்ள மனதில் உறுதி பூண்டு ....

"இதுவும் கடந்து போகும் " என்ற மந்திரத்தை மனதில் கொண்டு வாழ்கையில் வெற்றிபெற சபதம் கொள்ளுங்கள்....

எழுதியவர் : வே.சரவணன் (12-Apr-15, 11:07 am)
பார்வை : 577

மேலே