எலியாருடன் ஒரு நாள்

சுறுசுறுப்பு நாயகி என்கின்ற ஒரு விருது இருக்குமானால் அது "மாளவிக்காவிற்கு " தான் கண்டிப்பாக அளிக்கப் பட வேண்டும். காலில் சக்கரம் . மூளையில் அதை இயக்கும் விசை. அப்பப்பா!!! ...... ஒரு நிமிடம் கூட சும்மா இருக்க மாட்டாள் மாளவிகா .

இல்லத்தூய்மை அவளது உயிர் மூச்சு. வீட்டை தலை கீழாய் பிரட்டி விடுவாள் . 24 மணி நேரமும் சுத்தம் தான் . வயது 50 நெடிய உருவம் ஆஜானு பாகுவான சரீரம். . இளமையான எண்ணங்கள் .. நடந்தால் கூட மூச்சு வாங்கும். ஆனால் வாங்கும் மூச்சை திரும்ப கொடுத்து விட்டு ஓடும் சுபாவம்.

அலுவலகத்தில் அதிகாரி. உருவத்திலயே எல்லோரையும் பயப்பட வைக்கும் குணாதிசயம். நல்ல அறிவு படைத்தவள். நகைச்சுவை என்பது அவள் தனிச்சுவை. போட்டிகளில் போட்டி போட்டு பரிசு பெறுபவள். உழைப்பு அவள் மூல தனம். அவளின் உயர்வு அவள் உழைப்பின் பரிசு. . . 30 பேர் என்றாலும் சுளுவாய் சமையல் செய்யும் திறன்.

மாளவிக்காவை பற்றி அறியாதவர்களுக்கு ஒரு சிறிய அறிமுகம் ...............

மனிதர்களுக்கு இரு முகம் உள்ளது. மாளவிக்காவின் மறு முகம் இதோ ....

மாளவிக்காவிற்கு பொதுவாய் 'எலி ' என்றால் பயம். ... பயம் என்றால் சாதாரணமான பயமல்ல .... அவள் மூச்சும் நின்று விடும் . அருகில் இருப்பவரின் மூச்சையும் நிறுத்தி விடுவாள்.

இதோ மாளவிக்காவும் எலியும் ஒரு நேரடி சந்திப்பு .......

கணவர் ஊரில் இல்லை . இனிய காலையில் எப்போதும் போல் சுறுசுறுப்புடன் எழுந்தாள். காலை வாசலில் கோலமிட்டு விளக்கேற்றி உடலை இயக்க காபி எனும் பெட்ரோலை வயிறு எனும் என்ஜினில் ஊற்றினாள்.

சுத்தம் செய்வது என்றால் அவள் உடலே முறுக்கி கொள்ளும். . ரா.... ரா .... என ஜோதிகா போல் ரங்கராட்டினம் ஆட ஆரம்பித்து விடுவாள்.

அன்று .......

சோபா இருக்கைகளை மாற்றி அமைத்து எல்லாவற்றையும் துடைத்து முடிக்கும் போது மணி 8 . குளித்து அலுவலகம் கிளம்ப வேண்டும். மனதில் ஒரு போராட்டம். உடனே கிளம்பிடலமா, இல்லை இந்த நியூஸ் பேப்பரை மட்டும் சுத்தம் செய்து விட்டு கிளம்பலாமா என !

இரண்டாவது எண்ணம் வெற்றி பெற்றதால் பேப்பரை சரி செய்ய அருகில் உள்ள கருப்பு நிற பையை தள்ளினாள் மாளவிகா !!!

தள்ளியது தான் தாமதம் ...........

உள்ளே இருந்து பளிங்கு போன்ற கண்ணுடன் நீண்ட வாலுடன் கரிய நிறத்தில் பொத்தென்று ஒரு எலி வந்து அவள் மேலே விழுந்தது ....

அவ்வளவு தான் !!!!!!

அம்ம்........மா .............. என்ற அவள் அலறல் ஆலய மணி போல கேட்டது

உடல் நடுங்கியது. கையில் இருந்த பேப்பர் கீழே விழுந்தது. பயத்தில் இதய துடிப்பு மருத்துவர்களுக்கு நிரந்தர வருமானம் அளிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து விடும் போல இருந்தது.

ஓடினாள் ஹாலுக்கு.

எலி பின் தொடர்ந்தது. கால்கள் இரண்டும் பின்னியது. ஓடியதில் ஒரு நாற்காலியில் இடித்து கொண்டாள். எலியால் ஏற்பட்ட மனவலியில் கால் வலி பறந்தது. சமையல் அறைக்குள் ஓடினாள்.

எலி மாளவிக்காவின் சுறுசுறுப்பை பார்த்து பொறமை பட்டது . ஓட்ட பந்தயத்தில் நீ வெற்றி பெற போகின்றாயா ? அல்லது நானா? என்ற மமதையுடன் என்ன தான் ஆகின்றது பார்த்து விடலாம் ,என எலியும் போட்டிக்கு தயாரானது .

மாளவிகா கடவுளே! கடவுளே ! எனக்கு ஒரு வழி காட்டு ! . இந்த எலியை எப்படியாவது இங்கிருந்து வெளியில் அனுப்பி விடு என கண் மூடி மனதிற்குள் பிரார்த்தனை செய்யும் போது எலி காலில் ஏறி திரும்ப ஓடியது .


அம்மாஆஆஆஆ ...........திரும்ப அலறினாள் மாளவிகா . ஐயையோ !!!!!! நான் என்ன பண்ணுவேன்?????? இந்த எலியை எப்படி விரட்டுவது . ச்சே ! .... யார் மூஞ்சியில் இன்னிக்கு முழிச்சேனோ ????

அப்போது இடது மூளையிலிருந்து ஒரு அசரிரி ...!!!!!

போயும் போயும் இதற்கா இப்படி பயப்படறே !

அது உன்னை பார்த்து பயப்படுது !!. நீ அதை பார்த்து பயப்படுறே ! அவ்வளவு தான் !

ஆக மொத்தம் இரண்டு பெரும் அவரவர் உயிருக்கு பயப்படறீங்க ......

அசரிரியின் தாக்கம் மாளவிக்காவிற்கு தைரியத்தை அளித்தது.

துணி உணர்த்தும் கட்டையை எடுத்தாள். . எப்படியாவது இதை விரட்டி விட வேண்டும். வீட்டில் இருந்தால் என் மூச்சு நின்று விடும் என கட்டையை எடுத்து தைரியமாய் தட்டினாள். உடனே சமையல் அறையிலிருந்து எலி ஹாலுக்கு ஓடி வந்தது.

என்ன செய்வது என்று தெரியவில்லை. எல்லா அறைகளின் கதவுகளையும் மூடினாள். திரும்ப காலில் ஏறி விடுமோ என்கின்ற பயத்தில் சோபாவில் ஏறி மேலே நின்று கொண்டாள். .

எலி எந்த சத்தமும் இல்லாததால் வெளியே வந்தது சோபாவை நோக்கி ..........

மறுபடியும் பயத்துடன் ஒரு அலறல் .........ஐயோ .................

ஐயோ ! இந்த சனியன் என்னை இனிக்கு மயானத்திற்கு அனுப்பி விடும் போல இருக்கே !

கையில் இருந்து கட்டை கீழே விழுந்தது. பிள்ளையாரே !! எனக்கு எவ்வளவு நல்ல மனசு ! உனக்கு தெரியும் என்னை பற்றி. நான் எவ்வளவு பயந்த சுபாவம் என்று என்னை காப்பாத்து ப்ளீஸ். !!!!!!!!!

கடவுள் கண் திறந்தார் . எதிர் வீட்டு முதியவர் குஜராத் மாநிலத்திலிருந்து வந்து வசிப்பவர். உள்ளே நான் சோபாவின் மேல் ஏறி நிற்பதை பார்த்து உள்ளே வந்தார் . what happened ? என வினவி கொண்டு ....

No uncle nothing .............a rat .............. has கம்....... I am afraiid .that 's why

உதட்டோர புன்னகையுடன் எதுவும் நடக்காதது போல் ஒரு துணி எடுத்து வந்தார் . கட்டையால் தட்டினார் . எலி வெளியில் வந்தது. லாவகமாய் எலியின் காலை துணியை கொண்டு பிடித்தார். வெளியில் கொண்டு விட்டு விட்டார்.

ஒரு நிமிடம்....ஒரே நிமிடம்............................... அவ்வளவு தான் ....

இதற்க்ககவா இவ்வளவு நேரம் பயந்தேன் .....

மாளவிக்காவின் இதய துடிப்பு குறைய ஆரம்பித்தது ஆனாலும் மாளவிக்கா தன் பழைய நிலையை அடைய ஒரு வாரம் ஆனது. எதை தொட்டாலும் பயம் .................


==================================================================================================
உலகத்தில் உள்ள மிக அதிகமான
துன்பங்களுக்கெல்லாம்
காரணம் பயம் "

பயம் தான் எல்லா
மூட நம்பிக்கைகளுக்கும்
காரணம் !

பயமற்ற தன்மை ஒரு
வினாடியில் சொர்க்கத்தை
கொண்டுவருகின்றது
====================================================================================================

****************************** கிருபா கணேஷ் ****************

எழுதியவர் : கிருபா கணேஷ் நங்கநல்லூர் (12-Apr-15, 11:29 pm)
பார்வை : 427

மேலே