பகட்டு தையல்காரன்

நான் ஒரு தையல்காரன்
எனக்கு வெட்டவும்,ஒட்டவும் தெரியும்.


அளவெடுத்து கட்சிதமாய்
கை,கால் வைத்து
களிசன்,சேட்டில் சிலவும்
சட்டைகளில் சிலவும்
தைத்து போட்டிருக்கிறேன்

மனைவி எல்லாவற்றுக்கும்
பொத்தான்கள்,பூக்கள் கட்டி
மினுக்கி அயன் போடுகிறாள்

ஆனால்;
கிழிந்து தொங்கும்
அம்மாவின் சேலைக்கோ,
அப்பாவின் வேட்டிக்கோ பகரமாய்
மாற்றுத் துணிக்கு
மனசு வருவதுமில்லை
ஒட்டுப் போட என்னிடம்
ஊசி,நூல் இருப்பதுமில்லை.


ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை

எழுதியவர் : ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை. (12-Apr-15, 12:17 pm)
பார்வை : 242

மேலே