முகமே முகமூடியாய்

முகமே..... முகமூடியாய்....!
முகமே...!
இங்கு -
முகமூடியாய்...!
அரிதாரம் -
பூசாத தங்கம்....!
அகத்தை -
காட்டாத அங்கம்...!
அநேகருக்கு -
வாய்த்தழகு முகம்...!
முகமே...!
இங்கு -
முகமூடியாய்...!
இதழ் யெங்கும்
நகை இருக்க....
இதயத்தில் -
பகை யொன்றே
நிறைத்திருக்க....
வாய் நிறைய
வஞ்சனை நெய் வைத்த....
மனிதருக்கு...!
முகமே...!
இங்கு -
முகமூடியாய்...!
உள்லொன்று
வைத்து....
புறமொன்று
பாடிடும்.....
புல்லர்தம்
முகமே...!
இங்கு -
முகமூடியாய்...!