மெல்லயெடுத் தார்சலசூ சி - இரு விகற்ப நேரிசை வெண்பா

சீனாவில் சியாபோ சியன் என்ற ஒரு 11 வயதான பள்ளிச் சிறுவனை அவனது தாயார் தொண்டை வலியும், மயக்கமும் இருப்பதாக மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். அவனது தொண்டையில் ஒட்டி இரத்தம் உறிஞ்சிக் கொண்டிருந்த 7 செ.மீ நீளமுள்ள ஒரு நீர் அட்டையை மருத்துவர் எடுத்திருக்கிறார்.
பையனை விசாரித்த பொழுது, அவன் சில வாரங்களுக்கு முன் சாலையோரத்திலிருந்து கிணற்றின் வாளியிருந்து நீர் அருந்தியிருக் கிறான். அதிலிருந்த அட்டையைக் கவனிக்காமல் விழுங்கியிருக்கிறானெனத் தெரிய வந்தது.
இரு விகற்ப நேரிசை வெண்பா
பதினோ ருவயது பாலகன் தொண்டை
அதிகவலி கண்டு அழவே - மதியுடை
நல்மருத்து வர்பையன் தொண்டையி லேகண்டு
மெல்லயெடுத் தார்சலசூ சி!
சலசூசி – water leech