செய்த துரோகம் மறந்திடாமல்

ஈழத்தமிழா!
உன் தேகம்
உரசிப்போன கத்திகளுக்கு
நீ பதில் சொல்ல தேவையில்லை.

அவை
உன் உடலை மட்டுமே
உரசிவிட்டு போனது
உன் வீரத்தை அல்ல.

உரசிய ஓர் நொடியில்
உன் ரத்தம் மண்ணில் சொட்டியது.

அது ரத்தம் அல்ல
நீ செய்த யுத்தத்தின் அர்த்தம்.

அவன் தூரோகத்திற்கு
ரோகம் வரும் காலம் - அடுத்த நொடியிலே நிகழ்ந்திடலாம்.

காத்திருப்போம்! செய்த துரோகம் மறந்திடாமல்......

எழுதியவர் : அரிபா (12-Apr-15, 5:44 pm)
சேர்த்தது : ஹரி
பார்வை : 3221

மேலே