நிசமுசுதசாவின் இடுகாட்டு உளறல் கேட்க சீனாவிற்கு செல்வோம்

பெயர் நிசமுசுதசா
தோற்றம் 1989
மறைவு 2044.

இன்னும் சில
நீங்கள் எழுத வேண்டும்
ஏய் சிமென்ட் பூசிவிட்டு
எழுதிச் செல்பவர்களே...

நில்லுங்கள் திரும்புங்கள்.
பத்தாயிரம் ஹெர்ட்சில்
கத்துகிறேன். உங்கள்
காதில் விழவில்லையா?

அப்படியென்றால்...

ஆகாத நேரத்தில்
கெமுகி கிழவி இறந்து
ஆவியாய் வந்து தினம்
காதில் பேசுகிறாள் என
சாப்ஸ்டிக்கால் குத்தயில்
பிரம்மை பிடித்த டகாசு சொன்னது...

தொண்டையில் நூடுல்ஸ் சிக்கி
தொபுக்கென சாய்ந்த
தொகோரு பேய், 12 மணிக்கு மேல்
டூன்ஹாங்கில் ஒரு பழையவீட்டில்
தொங்கிக்கொண்டு உளறுமென
ஒகலீயிலிய் சொன்னது...

டங்ஸ்ஸி பழையத்தெருவில்
ரௌடிகளின் குங்பூ கலவரத்தில்
பலியான வாங்க் குடும்பத்து இளைஞன்,
நாற்பது நாளுக்கு பின் ஆவு உஆ
என்ற சத்தங்கள் எழுப்பிச் சிலரை
இரத்தம் கக்க வைத்தான் என்பது..

எல்லாமே பொய் தானா..??

ஆவியாய் மாறி
காதைக் குடைவது
பிசாசாய் மாறி
முதுகில் ஏறுவது
முடியாத காரியமென
இறந்த பின்னரே புரிகிறது.

இருந்தாலும் பரவாயில்லை
ஞாபகம் வந்ததும்
எழுதுங்கள் என் கல்லறையில்...

சுயநினைவோடு இருந்த
போன மாதம் ஒருநாள் முழுதும்
பையிலிருக்கும் செல்பேசியை
கையில் எடுக்காமல் சுற்றி
கின்னஸ் சாதனை செய்தவன்
இந்த நிசமுசுதசா என்று...
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (13-Apr-15, 11:44 am)
பார்வை : 77

மேலே