தூரிகையின் தூவல்கள்
புதிதாய் கட்டிய
வீட்டில்
அறைகள் ஒதுக்கப்படுகிறது
- தேன் கூடு
-------------------------------------------
இங்கு குளித்தால்
எந்த பாவமும் நீங்கும்
எங்கு நான் குளிக்க
என் பாவம் நீங்க
- கங்கை
------------------------------------
கல் தெய்வமானது
தெய்வம் கல்லானது
--------------------------------------
யார் நெய்த வரம்
முதிர்மரம் கையில்
பூக் கூடை
-----------------------------------
கதர் சட்டையில்
சுத்தமாய் தலைவர்
அசுத்தமாய் தொகுதி
--------------------------------------
மேகப் போர்வையை
சரியாக உலர்த்தவில்லையோ
தூரிக் கொண்டிருக்கிறது
-------------------------------------------
நிலவுக் காட்சியில்
நட்சத்திர கலாட்டா
-----------------------------------------
தந்தியில் வந்தார்
மறக்கப்பட்ட அப்பா
மரணித்தவராய்
------------------------------------------
இருகோடு நோட்டு வாங்க
திருவோடு வாங்கினான்
ஏழை சிறுவன்
-----------------------------------------
கூழ் ஊத்த மறுத்தவர்கள்
வரிசையில் நின்று
பால் ஊத்துகிறார்கள்
மரணப் படுக்கையில் கொல்லப்பட்ட தாய்
--------------------------------------------------
காவல் ஏற்பாடுகள் பலம்
அன்று
கோவிலில் அன்னதானம்
-----------------------------------------------------
பிரிந்த பிறகும்
முகம் விரிந்தே இருப்பது
பூக்களுக்கு மட்டும் தான்
---------------------------------------------------------
என்னை களங்கப்படுத்தாதீர்கள்
கால்களை பிடித்து
மன்றாடிப் போகிறது கடல்
-------------------------------------------------
இரவு பகலாய் எரிந்தும்
தீராத விளக்கு
சூரியன்
-------------------------------------------------------
இரவில் மட்டும்
இறவல் போகும்
மாதுக் கிண்ணம் அவள்
---------------------------------------------------
தடுமாறும் வாழ்க்கையில்
தடுமாறுது உடை
--------------------------------------------------
இருப்பவனுக்கு
பசி ருசி அறியாது
இல்லாதவனுக்கு
பசி பசி அறியாது
-------------------------------------------------