புதிய பாதையில்

மற்றுமொரு ஆண்டு
மலரும் இந்நேரத்தில்
மலர்ச்சியுடன் அடியெடுத்து வைப்போம்
மணமான புதிய பாதையில் ...............
பணம் வேண்டி
பரிதவித்து ஓடும் இன்றைய
மாரத்தான் ஓட்டத்தின் இடையே
மனத் திறனறிந்து
மன வளத்திற்கு
மகிழ்ச்சியுடன் முக்கியத்துவம் அளிக்க
நகைச்சுவைக்கு "பட்டா" வாங்கி
ஆரோக்கியத்திற்கு " சிட்டா" எடுத்து
வளமான வாழ்க்கை எனும் சொத்திற்கு "அடங்கல்" பெற்று
வாழ்வில் பெயர் பதிப்போம் !
வாழ்வின் வலிகளிலிருந்து நிவராணம் பெற
வளமான எண்ணங்களினால்
வாசமுள்ள பூங்கா அமைத்து
பிறப்பிற்கு பெருமை சேர்ப்போம் !
புதிய இலக்கோடு
புதிய பாதையில்
புதுமையாய்
புத்துணர்ச்சியோடு செயல் பட
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் !
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தலைப்பு ரங்கோலி கிருபா கணேஷ்
*****************************************************