மன அழுத்தம்

மன இறுக்கங்களால்
மன அழுத்தம்
மன முதிர்ச்சியால்
மறு மலர்ச்சி .......................
துயரங்களால்
துன்பம் !
துன்பங்களை சந்திப்பதால்
துயரத்திற்கு தீர்வு !
எல்லாம் நன்மைக்கே எனும்
எண்ணங்களின் கோட்பாடு
எள்ளி நகையாடும் இன்னல்களை
ஏணியில் ஏற்றும் நம்மை !
பிரச்சினைகள்
விவாதங்கள்
வாக்குவாதங்கள்
தற்காலிகமானவை !!!
நம்பிக்கை
நல் செயல்திறன்
நேர்மறை எண்ணங்கள்
நிரந்தரமானவை !
உணர்வுகளுக்கு
அதிபதியாகாமல்
எண்ணங்களுக்கு
அதிபதியாக்கி
வாழ்விற்கு வளம் சேர்ப்போம் !
வலிகளை
வாய்ப்புகள் ஆக்குவோம் !
நம்பிக்கையை
நலமாய் வளர்ப்போம் !
அமைதியாய்
செயல்படுவோம்
ஆணித்தரமாய்
எதிர் நீச்சல் போடுவோம் !
மேடு பள்ளங்கள் தான்
மேன்மையான
வாழ்க்கையின்
அஸ்திவாரம் !
மன இறுக்கத்தை தவிர்ப்போம்
மணமாய் வாழ்வோம் !