மழைதனில்
இன்று என்ன!? இந்த வானிலை புதிதாய்.. !
மனம் குழந்தையாய், குதிக்குது மெதுவாய்?
மழை சாரலலில்..,
நனையவே மனம் தூண்டுது..
என் கால்களில், புது நடனம் தான் முளைத்தது.. !!
இது கனவென்று, தான் நெஞ்சமும் நினைத்தது..!!
மண் வாசனையில், நிஜமும் புரிந்தது.. !!
புரிந்ததும் மனம் சிலிர்க்குது.. !!
மழைதனில் மனதை, மனம் தொலைத்தது.. !!
இன்று தான் பிறந்ததாய் உள்ளம் உணருது.. !!
அந்த உணர்வினில்,
என் உலகம் தொலைந்தது.. !!