ஆண் ஆதிக்கம்

ஆணால்
அனுப்பப் பட்ட
ஆண் அணுவின் குரோமோசோம்களால்
ஆணாய் படைக்கப்பட்டான்!

இயற்கையான நிகழ்வு ....
ஆனால்
இடி மின்னலுடன்
இன ஆதிக்கம் ....


இத்தனை காலம் ஏனென்று புரியவில்லை?
இப்போது புரிகின்றது ...

ஆதிக்கம் செலுத்தா விட்டால்
ஆதிக்கத்திற்கு ஆளாகி விடுவோம் என்ற
ஆழ் மனதின் பயம் .....

பெண்ணால் இவ்வுலகில் பிரவேசித்து
பெண்ணால் அடுத்த தலை முறையை உருவாக்கி
பெண்ணால் உணவு உண்டு, ஊக்கம் பெற்று
பெண்ணால் உன்னதமான வாழ்க்கையையும் பெரும் ஆண்களே ...

அன்பான பெண்மையிடம் அன்பை ஆதிக்கம் செலுத்துங்கள்
அம்சமான வாழ்க்கை உங்களிடம் என்றென்றும் .....

எழுதியவர் : Kirupa Ganesh Nanganallur (15-Apr-15, 9:53 pm)
Tanglish : an aathikkam
பார்வை : 1101

மேலே