மழை நீர்

மழை பெய்கிறது...
மேகத்திற்கும் வியர்த்ததோ?
வியர்வை துளிகளை
உதிர்க்கிறதே!!!
அவளுக்கும் புரிந்திருக்கும்
பூமியின் வெப்பம்...
மேகமகள்
கண்ணீர் வடிக்கிறாளோ
யாருக்குத் தெரியும்?
காவு வாங்க
காத்திருந்த உமிழ்நீரோ
யார் அறிவார்?
பூமியின் கழிவால்
வந்த சிறுநீரோ
நானறியேன் ...?
அமிலமும் ஆகாயமும்
புணர்ந்ததால் வந்த
கொதிநீரோ
நீர் அறிவீரா?
அது எதுவானாலும்
எமக்கு நீர் வேண்டும்
எங்களுக்கு தண்ணீர் பஞ்சம்...!

எழுதியவர் : ஏஞ்சல் (15-Apr-15, 10:09 pm)
சேர்த்தது : ஏஞ்சல்
Tanglish : mazhai neer
பார்வை : 154

மேலே