ஊடல்களின் உமிழ்தல்கள் 2

எல்லோருக்கும் எப்படியோ
எனக்கு இப்படித்தான்

திருமணதிற்கு முன்
வேற்றுக்கிரகம்போல அறியா
ஒன்றிற்கான எதிர்பார்ப்பு
எனக்கான ஒருவன்
என்றோ வருவான்
என்றும் எனக்காகவே
இருப்பான் என்றும்

திருமணமான முதலாண்டில்
வானவில்லாய் தோன்றுகிறது
திருமண வாழ்க்கை

பூரித்துபோய் பூத்து
புதியவனை அத்தான்
என அழைத்து சாயும்
பெண்ணின் வாழ்க்கை
பின்நாளில் ஏனோ
புதிராகி போகிறது

நாட்கள் நகரநகர
கானல்நீரை போலதான்
கரைந்த வண்ணங்களும்
கலைந்த கனவுகளுமாய்
வாழ்க்கை இப்போதெல்லாம்
வெளிர்நிறத்தில் எப்போதும்

எழுதியவர் : யாழ்ழினி வ (15-Apr-15, 10:10 pm)
பார்வை : 72

சிறந்த கவிதைகள்

மேலே