அழகான வாழ்க்கை

ப்ளசர் காரைவிட்டு
அசுத்தமான காற்றைவிட்டு
இரைச்சலான இந்த‌
இடத்தை விட்டு..

வில்லு வண்டி கட்டிக்கிட்டு
வில்லுப்பாட்ட கேட்டுக்கிட்டு
விடுமுறைக்கு ஊரப்பாக்கம்
போவோம் மச்சான்..

ஆத்து மணலில்
ஆடிப் பார்ப்போம்..
ஆனந்தமாய்
இருக்கும்..

மரத்து நிழலில்
படுத்துப் பார்ப்போம்..
நிம்மதியாய்
இருக்கும்..

நிலவோடு
பேசிப் பார்ப்போம்
நித்தம் கதை
சொல்லும்...

பழைய சோற்றை
ருசித்துப் பார்ப்போம்
அமிர்தமாய்
இருக்கும்...

மழலையோடு
விளையாடிப் பார்ப்போம்
மனபாரமெல்லாம்
நீங்கும்...

சுத்தமான காற்றை
சுவாசிக்கும்போது
சுகமாக இருக்கும்....
கள்ளமில்லா மனதுள்ளோர் ஊரில்
வசிக்கும் போது
சோகமெல்லாம் மறக்கும்....

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (15-Apr-15, 10:44 pm)
Tanglish : azhagana vaazhkkai
பார்வை : 865

மேலே