ஊடல்களின் உமிழ்தல்கள்3
என் உணர்வுகள்மேல்
எந்த புரிதலும் இல்லாத
உன்னோடு ஏன்
இன்னமும் பயணித்து
கொண்டிருக்கிறேன் என்ற
கேள்வி இப்போதெல்லாம்
எனக்குள் அவ்வப்போது
ஊடலும் கூடலும்
தாம்பத்தியத்தின் இயல்புதான்
என்று தெரிந்தும்
தொடர தோன்றவில்லை
இந்த உணர்வற்ற
உயிரற்ற பந்தத்தை
ஊடலே தொடர்கதை ஆனது
உணர்வுகள் மரத்துதானே போனது
ஆதரவற்ற நாதனும்
அன்பற்ற நாட்களும்
அர்த்தமற்ற இரவுகளுமாய்
நீளும் இந்த உறவை
அறுத்துவிடவே நினைக்கிறேன்
உனக்கும் எனக்குமான
வாதப்போரில் தோற்றுப்போய்
சாய்ந்து அழத்தொடங்கும்
என் பெண்மையின்
ஏமாற்றங்களும் கோபங்களும்
கரைந்து போனது
அம்மா என்னாச்சு..சு என்ற
மழலையின் ஒற்றை சொல்லில்
ஒண்ணுமில்லைடா என்ற
பொய்யை நம்பாமல்
என்னையே பார்த்து
மருகி நிற்கும் என்
மழலைக்காக போலியாய்
புன்னகைத்தது உதடுகள்
ம்ம்ம்
பழகித்தான் போனது
என் உதடுகள் இப்போதெல்லாம்
போலியாய் புன்னகைக்கவும்
எத்தனையோ பேரிடம்
நான் நன்றாக இருப்பதாய்
பொய் சொல்லவும் !!
வயிற்றுப் பசிக்காகவும்
வயசுப் பசிக்காகவும்
மட்டுமே மனைவியைதேடும்
மர மண்டைகளை
என்ன செய்ய
மனசுவிட்டு பேச
காத்திருக்கும் இந்த
மெல்லிய மயில்களுக்கு
என்றும் ஏமாற்றமே !!!
என் உணர்வுகள்மேல்
எந்த புரிதலும் இல்லாத
உன்னோடு ஏன்
இன்னமும் பயணித்து
கொண்டிருக்கிறேன் என்ற
கேள்வி இப்போதெல்லாம்
எனக்குள் எப்போதும் !!!!