பிரிவிலும் பிரியாத பிணைப்பு 0தாரகை0

இடைவெளி

உள்மனத்தை நிர்வாணமாக்கி
நினைவுகளை உதிர்க்கும்
நீலப்படம்!

பிரிவை காட்டுவதாய் போய்
நெருக்கத்தை பிரதிபலிக்கும்
கிரிஸ்டல் கண்ணாடிகள்!

வானுக்கும் மண்ணுக்கும்
இடைப்பட்ட ரூஹ்களின்
ஆக்ஸிஜன் !

நம் மனதின் கோலத்தை
நாமே அறிய உதவிடும்
செல்ஃபி ஸ்டிக்குகள்!

தூரத்துப் பச்சைகளை
அழகாய் காட்டிடும்
HD கேமராக்கள் !

தீயினை சூடிட எண்ணி
பூவில் மோதி உடையும்
பூகம்ப நிகழ்வு!

இடைவெளி

வரத்தின் தவம்
புரிதலின் களம்
ஞானத்தின் சாவி

இடைவெளி

கடலில் கரைத்த பெருங்காயமல்ல
பெருங்கடலை எதிர் நீச்சலில் கடக்கும் அரும் சாகசம் !

இடைவெளி

சிந்தனையின் அடிநாதம்!
தவிப்பின் ஒழுங்குவடிவம்!
காலச்சக்கரத்தின் கட்டமைப்பு !

இடைவெளி

மூச்சடைக்கும் அன்புமுட்டலுக்கும்
சுவாசத்திற்குமான
இடைவேளை !

இடைவெளிகள் கூட்டலே
கழித்தலோ
அழித்தலோ அல்ல!

இடைவெளி

விதைக்கும் வேருக்குமான
பரிணாம மாற்றத்தை
காட்டும் காலக்கடிகாரம்!

எழுதியவர் : தாரகை (16-Apr-15, 1:08 pm)
பார்வை : 177

மேலே