மனைவிகள் கவனத்திற்கு

உன் கரம் பிடித்து
நடக்கும் முன்
நான் நடை பழகியதே
என் தந்தையின் கரம் பிடித்து..

உன் தோளில்
சாயும் முன்
நான் உறங்கியது
என் தாயின் தோள் சாயிந்து

உன்னோடு ஆசையாய்
விளையாடுவதற்கு முன்
நான் விளையாடியது
என் தம்பியுடன்

உன் உணர்வுகளை மதிக்க கற்றுக்கொடுதவள்
உனக்கு முன்
என் வாழ்வில் பெண்ணாக வந்த
என் தங்கை

உன்னிடம் என் கனவுகளை
பகிர்வதற்கு காரணம்
எனக்கு கனவு காண கற்றுக்கொடுத்த
என் நண்பர்கள்

என் பெற்றோரை
முதியோர் இல்லத்தில் சேர்க்கவேண்டுமானால்
என்னை சேர்க்க வேண்டும்
மனநல காப்பகத்தில்

இவர்களுக்கு பதிலாக
என் உயிரையும் கேள்
தருகிறேன்

நம் குழந்தை பிறந்தவுடன்
உன்னிடம் இருந்து பிரித்தால்
பெண்ணே உணர்வாயோ என் வலி ?

எழுதியவர் : வினோத் ஸ்ரீனிவாசன் (16-Apr-15, 7:05 pm)
பார்வை : 81

மேலே