முக்கியமான கேள்வி

பக்கம் பக்கமாய் புத்தகத்தில்
முக்கியமான கேள்விகளை
நிறைய குறித்து தருகிறார்
அந்த வகுப்பாசிரியர்.

இந்தியாவின்
முக்கியமான பதில்கள்
முதல் பக்கத்திற்கு
முந்தய பக்கத்தில்.

தீண்டாமை
ஒரு பாவச்செயல்..
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (16-Apr-15, 8:47 pm)
Tanglish : mukkiyamaana kelvi
பார்வை : 84

மேலே