அப்பா

அப்பாவின் உடம்பில்
காரோட்டி விளையாடி
அவரை உறங்கச் செய்திட்ட
குட்டி வாண்டுகளை விட
தூங்குவது போலவும்
வலிக்காதது போலவும்
குழந்தைகளுக்காக
குழந்தையாய் மாறிவிட்ட
அப்பாவே சிறந்தவர்!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (16-Apr-15, 7:03 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
Tanglish : appa
பார்வை : 65

மேலே