கடகபந்தம் ப்ரேசிலட்

அன்பு பாரதி !
நீ- எழுத்தில் பாக்கள் வடித்து தரும் உன் கைகளுக்கு பொன்னால் ஆன பிரேசிலட் செய்ய ஆசைதான் ...ஆனால் இயலாது என்பதனால்
தமிழில் கடகபந்தம் அமைத்தேன்
தம்பி, வெண்பாவில் முதற்சீரில் 2,4,6 எழுத்துக்கள் ஒன்றியைந்து வரவும் மூன்றாம் சீரில் 2,4,6(அதாவது 12,14,16) எழுத்துக்கள் ஒன்றியைந்து வரவும்
எழுதி வெண்பா எழுத வேண்டும்
சகலகவி கள்பாடிச் சந்தந்தந் தோனே
புகழும் கவிபா ரதிக்கு - திகழும்
எதுகையால் செய்யுள் சிறப்புக் கடக
மிதுகையில் செய்யும் சிறப்பு.
ஈற்றடி 2ஐ பாருங்கள்
எதுகையால் செய்யுள் சிறப்புக் கடக
மிதுகையில் செய்யும் சிறப்பு.