குறளில் புதுமை

தெய்வம் தெய்வம் என்றே அலைந்தவர்கள்
தெய்வத்தை கண்டாரும் இலர் .

தனியாரின் தறிகெட்ட பணவெறியால் கல்வி
ஏழைக்கு எட்டாக் கனி .


அரசு பணமுடையோர்க் கென்பது மெய்யானால்
விரைந்து கெட்டழியும் என்க .


விதிவிதியால் விதிசெய்தார் தம்மை மதியால்
வெல்வது உறுதியான செயல் .


விவாதமின் றெழுகின்ற சட்டத்தால் எப்பயனும்
இல்லை ஏழைக்கு என்க .


அவசரச் சட்டம் ஆயிரம் வந்தாலும்
ஏழையின் கண்ணீரால் கெடும் .

அமைதி அமைதியென சொல்லுவார் தம்மை
தாம்தன் சொல்லினால் வெல்க .

கற்க கசடற கற்றபின் ஏழைக்கு
எட்டும் படியாய் செய்க

மரத்தை அழித்தார் மரணப் படுக்கையில்
மரமாய் கிடந்தார் பலர் .

முள்மரம் களைய ஆயுதம் தேவை
ஆயுதத்தை தெய்வமாய் கொள்க .

எழுதியவர் : porchezhian (16-Apr-15, 10:23 pm)
சேர்த்தது : porchezhian
பார்வை : 64

மேலே