வெட்கத்தால் தலைகவிழ்ந்தேன்

ஓர் இரவில் தனிமையில் சென்றேன்
வெட்டவெளியில் நிலவின் வெளிச்சம்
குளிர்ச்சியாய் பரவி நின்றது
மரங்கள் இன்மையால் நிழல்கள் இல்லை
என் நிழல் மட்டுமே நிர்க்கதியாய் நின்றன
என் பழைய நினைவுகள் பரிதவிக்க வைத்தன
எங்கே! எங்கே! எங்கே!
துள்ளித்திரிந்த பருவத்தில்
என் துயர் நீக்கிய மரங்கள் எங்கே!
நாங்கள் ஏறி விளையாடிய மரங்கள் எங்கே!
தென்றல் தந்த மரங்கள் எங்கே!
தெவிட்டும் கனிகள் எங்கே!
எங்கே! எங்கே! எங்கே!
வெட்டவெளியில் என் கேள்விகள் மட்டுமே பரவி நின்றன
ஓர் ஒற்றை இரவில் ஒற்றையாய் நின்றேன்
எண்ண அலைகள் என்னைக் கொன்றன
மரங்களின் ஆவி ஒன்று என் இதயம் தொட்டுச் சொன்னது
மனிதர்களே! மனிதர்களே! மனிதர்களே!
நீங்கள் நன்றி கெட்டவர்கள் என்று
கண் விழித்துப் பார்த்தேன்
கனவென உணர்ந்தேன்
வெட்கத்தால் தலைகவிழ்ந்தேன்
வாழ்வில் ஒரு மரக்கன்றையாவது
வளர்த்ததில்லையே ! என்ற குற்ற உணர்வினால்!

எழுதியவர் : பொற்செழியன் (17-Apr-15, 5:27 pm)
பார்வை : 68

மேலே