வாழ்க்கை ஒன்றுமில்லை பகுதி 3
மனமே பொங்கியெழு
எரிமலை உருவம் கொடு
எதிர்த்து வருவதெல்லாம்
தகர்த்து எரித்துவிடு ....
கண்ணில் கனல் கொண்டு
மண்ணில் போராடு
மரணம் அதை வென்று
மாமனிதனாய் வாழ்ந்துவிடு
புலிகளின் பார்வை கொண்டு
பூமியில் நீ வாழு
தனிமையில் இனிமைஎல்லாம்
இளமையில் வேண்டாது
போராடும் மனம் கொண்டால்
தோல்வி உனக்கேது