எந்தன் சுகமானவனே

சுகமான சுமையாகி நின்றவனே
உடலகற்றினும் மனம் நிறைந்தவனே
உயிருள்ள கவிதையாய்
அழகாய் புன்னகைத்து
இதயம் கவர்பவனே

தழுவலின் முழுமை
அறிய செய்தாய்
இதழ் கொண்டு என்
உடல் நனைத்து வைத்தாய்
சுவாசங்களால் சுகம்
சேர்த்து தந்தாய்

உன் நகக்குறியினை என் உடல்
தாங்கச் செய்தாய்
என் மார்க் கூட்டினில்
புது வீக்கம் தந்தாய்

எனது சிரிபப்புகளின்
ஒற்றை காரணமானவனே
எனது ஏக்கங்களை
தீர்க்க வந்தவனே

பெண்ணாய் என்னை
முழுமையாக்கியவனே
கண்ணிலிருந்து விலகாதவனே
எந்தன் ஒட்டு மொத்த உலகமே

நீ தந்த முத்தங்கள்
ஏதேதோ செய்யுதடா
உன்னுடைய சத்தங்கள்
இன்னிசையாய் உள்ளதடா
நீ இடும் யுத்தங்கள்
பல சொல்லி செல்லுதடா

என் இனியவனே
என்னில் உதயமானவனே
பிஞ்சு விரலால்
கொஞ்சும் குரலால்
எனை வீழ்த்துபவனே

என் செல்ல மகனே
வா கண்ணா அழாதே
அன்னை இருக்கிறேனடா

எழுதியவர் : கவியரசன் (17-Apr-15, 9:27 pm)
பார்வை : 57

மேலே