மரணப்புன்னகை

ரோஜாக்களோடு
ஒப்பந்தம் செய்த
துப்பாக்கி ரவைகள்
என் இரத்த
நாளங்களை
பிடுங்கி எறியலாம்!!!
கானக்குயிலின்
கழிவுகளில்
உருத்தரித்த
புழுக்கள் கூட
மோகன ராகத்தோடு
என் எலும்புகளை
சுவைக்கலாம்!!
நீள் தூக்கத்தின்
விமோசன
கொட்டாவியில்
கந்தகத்தை
கலந்து ரசிக்கலாம்
உன் இரக்கமற்ற
நினைவுகள்!!
உன் நீண்டகால
மெளனத்தை
குழைத்து அப்பிய
கவிதைகள்
எங்கிலும்
உன் துரோகம்
வழிந்தோடலாம்!!
இதோ என்
தூசு தட்டப்படாத
கல்லறையின்
சிலந்திக்கூட்டில்
சில கவிதைகள்
துடித்துக்கொண்டிருக்க!!!
நெருங்கி
வருகிறது
இராடஷத
சிலந்தி
உன் புன்னகை
போல்....
கவிதையின்
கல்லறைகளை
திறந்து பார் சகி!!
உன் மெளனம்
எத்தனை கொடியது
என்பது உனக்கே
புரியும்...