நீ எனக்கு சுகமே
எனக்கு நீ சுகமே....
நீ என் அருகில் இருந்தாலும்
உன் மூச்சுக் காற்றும்
என் மீது...
நீ என்னை விட்டு
பலமைல் தொலைவில் இருந்தாலும்
என் நினைவு உன்னுடனே
நீ என்னோடு பேசினாலும்
உன் வார்த்தைகள் எனக்கு தங்கமே....
நீ என்னோடு பேசாவிட்டாலும்
உன் இதழ்கள் எனக்கு கனியே....
உன் இனிய கரங்கள்
என்னை அரவணைத்தாலும்
அது எனக்கு சொர்க்கமே...
என்னை அடித்தாலும்
அது எனக்கு செல்லமே...
அதனால்
எப்போதும் நீ எனக்கு சுகமே...