நம்பிக்கையோடு இரு …
காற்றைப் போல்
சுதந்திரமாக இரு …!
நெருப்பைப் போல்
தீமையை அழித்து விடு …!
வானம் போல்
திறந்த மனத்துடன் இரு …!
நதியைப் போல்
எதற்கும் வளைந்து கொடு …!
பூமியைப் போல்
பொறுமையோடு இரு …!
சூரியனைப் போல்
மற்றவர்களுக்கு ஒளி கொடு …!
மரத்தைப் போல்
மற்றவர்களுக்கு பயனுள்ளதா இரு …!
கடல் அலையைப் போல்
எதிலும் நம்பிக்கையோடு இரு …!