எழுத்து
சில நேரம் ஊற்றாய் பிரவாகம் எடுக்கும் நீ
சட்டென வறட்சியின் பரிதாபம் ஏன் அம்மா
எங்கள் எண்ணத்தின் அனுப்புனர் முகவரியும்
உதிரத்தின் சிவப்பணு வரிசையும் நீயே அம்மா
உன்னுடன் தான் எங்களின் தீராத பாசம் நீ
ஊட்டாவிடால் பட்டினி கிடப்போம் பாரம்மா
கருத்தரித்து உயிர்வளர்த்து உள் உணர்வுகள்
பிரசவிக்கும் மருத்துவச்சி நீதானே அம்மா
உன் கரம் பிடித்து தவழ்ந்து தத்தி தத்தி நடந்து
உன் மை நிழலில் தமிழ் வளர்ப்போம் அம்மா