எட்டித் தொட -கார்த்திகா
இன்று ஞாயிறு
விடுமுறை இல்லை
உணவு சமைக்க
உயரம் செல்ல வேண்டும்
கீழே விழப் போகும்
இலையை கவனித்து
கைப்பற்ற வேண்டும்
தவறிய தானிய மணிகள்
வேர் விடட்டும் -இன்றைய
முதல் நல்ல செயல் ..
அடுத்த பிரசவத்திற்கு
வீடு மாற்றிக் கொள்ளலாம்
இப்போதைக்கு கருவேல முள்
வேலி ஆனது ..
ஓடும் நொடிகளை
எண்ணி சிறகில்
வலிமை கூடியது....
இந்த நாள் கொஞ்சம்
நாளை வரை நீள்வதற்கு
வேண்டின என்
தோழமை சிட்டுக்கள்...
எனக்கு மட்டும் தோன்றியது
இந்த ஜன்னல் இன்னும்
பெரிதாய் இருந்திருக்கலாம்!!