சகியே-ரகு
அவள்
அழகின் மொத்தம்
ஹேன் பேக்கில்
பத்திரமாய் !
---------------------------
அவள்
எண்ணியதுபோலவே
இளசுகளின் விழிகள்
மொய்த்தன
இன்னும்
நிறுத்தியபாடில்லை
சிந்தும் புன்னகையை !
---------------------------
எதேச்சையாகவே
அவள்
அடிக்கடித் தென்படுவதாக
ஏமாந்திருந்தான்
அவளை ஈர்த்திருந்த
அந்த ஒருவன் !
---------------------------
இறங்கவேண்டிய
நிறுத்தத்தை விட்டு
அடுத்த நிறுத்தத்தில்
இறங்கி நடந்தபோது
ஊர்ஜிதப்பட்டது
அவளுடையக் காதல் !
---------------------------
''காதல் கன்றாவியெல்லாம்
பிடிக்காது ''
அவளுக்கும் பொய் பேசத்
தெரியுமென்றது
மறைந்திருந்தப் புன்னகை !
---------------------------
பலமுறை
படித்துவிட்டபோதும்
ரிப்ளை பண்ணவில்லை
அவள்
பார்த்திருக்கமாட்டாள்
நம்பிக் காத்திருந்தான்
அவன் !
---------------------------
கருவறைக்குள்
பிள்ளையாருக்கு பதில்
பாலாஜி தெரிந்தான்
பின்னாலில் அவனின்
AXE வாசம் !
---------------------------
இன்றும்
அவனுக்குப்
பிடித்த உடை
பிடித்த பூ
பிடித்த பின்னல் ஜடை
தயாராகி வந்தவளின்
பார்வைக்கு
ஏங்கிக் கொண்டிருந்தான்
அவன்
---------------------------
''wait பண்ணுவான்''
ஒரு காபி சொல்
என்றாள் தோழியிடம்
பருகியபிறகும்
அரட்டை தொடர்ந்தது
---------------------------
அத்துணை
வலிகளையும்
உணர்ந்த ஒருவனோடு
மணவறையில்
ஜொலித்தாள்
அவள் !
---------------------------