ஏக்க வேண்டுகோள்

என் சகோதர சகோதிரிகளே,கவிப்பேரரசுகளே நான் முதல் முறையாக கவிதை எழுதுகிறேன்.பிழை இருப்பின் மன்னித்து தோழமைகளை அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
(வளர்ந்த இந்த சமூகத்தில் ஒரு ஆண் பெண்ணிடம் நட்பு கொள்ள விரும்புகிறான்.நட்பை கூறினால் தம்மை காதலிக்கத்தான் இப்படி கூறுகிறான் என எண்ணி விடுவாள் என்று பயந்து கவிதையாய் உரைக்கிறான்)
உலகமும் மாற்றம் கொள்ளும்
மாற்றம் நிகழ்ந்த பின்
என் மனமும் வசந்தம் கொண்டது
உன்னை கண்ட பின்....!
இதயத்தில் சற்று இடம் கிடைக்குமா
காதலனாக அல்ல
கலங்கமற்ற தோழனாக....!
உயிருக்குத் தான் குடியிருக்க
ஆன்மா தேவை
என் நட்பிற்கு உன் இதயத்தின்
உள்ளுணர்வு போதுமே....!
தோழியே உன் காதலனாக
இருந்தால் கூறியிருப்பேன் நீ
என் காவியத்தலைவி என்று....!
உயிரே உன் தோழனாக
இருப்பதால் கூறமுடியவில்லையே
நீ என் நட்பென்று....!
இடர்பாடுகள் களைந்தும் தயங்கினேன்
நாணம் கொண்ட நீ
பெண்மை என்பதாலோ அல்லது
இவ்வாறு எண்ணிய நான்
ஆண்மை என்பதாலோ....!
உன் இமைகளோ அழைக்கிறது
உரிமையோடு நட்புக்கொள் என்று
உன் கூந்தலோ வெறுக்கிறது
சிறகோடு பறக்காத சேவலென்று....!
என் நட்பை மறுத்து
தீயிட்டாலும் மீண்டும் உயிர்பெறும்
பீனிக்ஸ் பறவைப் போல....!
நம் நட்பை ஏற்று
நீருற்றினாலும் மென்மேலும் வளம்பெறும்
மலரின் புன்னகைப்போல....!
கனவு கண்டேன் உறக்கத்தில்
நம்நட்பு சுடர் அளித்த
தீக்குச்சியாய் அணைந்ததென்று....!
காத்திருக்கிறேன், அணையா
மின்விளக்காய் நம்நட்பு வாழ்கிறது
எனும் உன் வார்த்தை சுடருக்காக....