செல்வம் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : செல்வம் |
இடம் | : சேலம் |
பிறந்த தேதி | : 11-Feb-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Apr-2015 |
பார்த்தவர்கள் | : 78 |
புள்ளி | : 6 |
உயரிய சிந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் கல்லூரி மாணவன்
விளையாட்டாய் ஒருநாள்
கேட்டாய்...
உனை விட்டு
நான் விலகி சென்றால்
என்ன செய்வாய் என்று...
நானோ மௌனத்தை
மட்டுமே அன்று பதிலாய்
தந்தேன்...என் பதிலை
தெரிந்து கொள்ள தான்
உன் கேள்வியை இன்று
நீ நிஜமாக்கினாயோ?...
செவிகளை திறந்து கேட்டுகொள்
சொல்கிறேன் என் பதிலை...
உன் காதலை சுமந்ததால்
தாயான நான்
உன் தாரமாகாவிட்டாலும்
உன்னை தூரமாய்
விலகிவிட விடமாட்டேன்
என் இதயத்திலிருந்து...
என்றாவது ஒருநாள் நீயும்
புரிந்து கொண்டு தேடிவருவாய்
நான் என் இதயத்தில்
வளர்த்துவரும் நம்
காதல் குழந்தையை பார்க்க...
பெண்ணே உன் முகம் கண்டு
கண்ணாடியும் வருத்தம் கொள்ளும்
அழகைப் படைத்த பிரம்மன்
முழு அழகையும் இவளுக்கே
படைத்து விட்டான் என்ற ஆதங்கத்தால்….!
கோபக்காரனாய் ஒருவன் வேண்டும்
கொஞ்சலும் தினம்தினம் வேண்டும்
ஆணவம் சற்று இருத்தல் வேண்டும்
அன்பிற்கு மட்டும் அடங்க வேண்டும்
அத்தை மாமன் உறவு அவன் தர வேண்டும்
அன்னை தந்தையாய் அவர்களே வேண்டும்.
***************************
நாத்தனார் சண்டைகள் சின்னதாய் வேண்டும்
அதில் நான் தினம்
தோல்வியுற வேண்டும்
மன்னிப்பு கேட்டு நான் மண்டாட வேண்டும்
அன்போடு மன்னிப்பையும் அவர்கள் அள்ளித்தர வேண்டும்
***********************
ஊரார் உச்சிக்கொட்டி தினம்
பார்க்க வேண்டும்.
கண்பட்டு விடும் என்று -அத்தை
தினம் சுத்திப்போட வேண்டும்
மருமகள் மகளாக மாறவேண்டும் வேண்டும்.
என் மணவாழ்க்கை மகிழ்ச்சி
வெற்றி நிச்சயம்
கானக் கருங்குயிலின்
இசைக்கேட்டு உணர்ந்தேன்;
தோல்வி நிச்சயமென்று,
இன்னிசை கொடுத்த
அவனால் இனிமையுடன் பாட
குரலிசை தரவில்லை என்பதால்…!
தொடுவான மேகத்தின்
துன்பம் கேட்டுணர்ந்தேன்;
தோல்வி நிச்சயமென்று,
வேண்டா வடிவம் கொடுத்த
அவனால் இன்பத்துடன் காண
வேண்டிய கண்ணீர் தரவில்லை என்பதால்…!
அழும் மழலையின்
மனதைக் கேட்டுணர்ந்தேன்;
தோல்வி நிச்சயமென்று,
பிறப்பினைக் கொடுத்த
அவனால் இறப்பின்றி வாழ
ஆயுள் தரவில்லை என்பதால்…!
கதறும் மனிதனின்
கதைக் கேட்டுணர்ந்தேன்;
தோல்வி நிச்சயமென்று,
உணர்ச்சிகளைக் கொடுத்த
அவனால் உண்மையுடன் வளர
(வைகறையின் நிகழ்வை கவிதையாக்கும் சிறுமுயற்சி)
கம்பன் கவியும் தோற்குமே
பறக்கும் பறவைகளின் இசைக்கேட்டு...!
மங்கையின் விழியும் திறக்குமே
சேவற் கூறும் மொழிக்கேட்டு...!
குழந்தை அழும் பசிக்கண்டு-பால்
கறந்திட சென்றாள் பசுக்கண்டு;
உழவனும் எழுந்தான் இதைக்கண்டு-பல்
துலக்கிட சென்றான் வேம்பு கண்டு;
அண்ணனும் அலறி எழுந்தான்
தேர்வின் பயம் கொண்டு;
எறும்புகளும் சாரையிட்டன அன்னையின்
பச்சரிசி கோலம் கொண்டு;
வெள்ளி மீனும் துயிலெழும் திங்கள்
மறையும் அழகைப் பார்த்து....!
ஞாயிறும் பிறக்கும் திங்களுக்குப் பின்
மரு
அவள்
கண்களிலே
காண்டாக்ட் லென்ஸ்
என்பது.......
மீன்கள் உடுத்திக் கொண்ட
மெல்லிய தாவணி.....!!
அட கள்வனே என் மனதை திருடுவதாக
நினைத்து வாழ்க்கையை திருடிவிட்டாயே…!
உன்னை கண்டவுடன் பெண்மை மறந்தேன்.
உந்தன் பந்தத்தில் திழைத்து
உயிர் வாழ வேண்டுமென, உதிரத்தால்
இணைந்த உறவுகளை தொலைத்தேன்.
உந்தன் கனநேர பிரிவையே தாங்காது
உள்ளம் சோர்ந்து போகுமே
ஆனால் இப்போது உன்னை பிரிந்த
உலகத்தில் பிறவிப்பலனையே இழந்தேனே…!
இருப்பினும் உயிர்வாழ துடிக்கிறேன்
உந்தன் கல்லறைத் தேடி….!